பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
178 ||

அப்பாத்துரையம் - 6




அடுத்து நடைபெற்ற ஆர்க்காட்டு முற்றுகையின் போதும், அதன் பின் நடைபெற்ற போராட்டங்களின் போதும் ஹைதர் புகழும் ஆற்றலும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தன.

மைசூர் இச்சமயம் ஈடுபட்டிருந்த போராட்டம் நிஜாம், ஆர்க்காட்டு நவாப் ஆகிய இரண்டு அரசர் குடிகளிலும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் எழுந்த அரசுரிமைப் போராட்டமேயாகும். இதுவே, கர்நாடகப் போர் என்ற பெயரால் 1748 முதல் 1754 வரை தென்னாடெங்கும் சுழன்றடித்த போராட்டப் புயல் ஆகும். இப்போராட்டப் புயலின் கருவிலிருந்தே ஹைதர் அலியின் புகழ் முதிர்ச்சியுற்று வளர்ந்து தென்னக வாழ்வில் தவழத் தொடங்கிற்று. அப்புயலின் வரலாறே அவன் புகழ் வரலாற்றின் தொடக்கம் ஆகும்.