பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
202 ||

அப்பாத்துரையம் - 6




ஒரு சிற்றரசின் எல்லையில் அடாது செய்த உட்பகை வளர்ப்பவன். இத்தகையவனுடன் சேர்ந்து செயலாற்றுவது தங்கள் பெருமரபுக்கு இழுக்காகும் என்று கூறவேண்டி வந்ததற்கு வருந்துகிறேன். ஆயினும், தம் ஆய்ந்தமைந்த அறிவமைதிப்படியே நடக்கவும்” என்று அவன் நயம்பட எழுதினான்.

ஏற்கெனவே மனம் புண்பட்டிருந்த ஈஸாஜிராவ், குந்திராவுடனே பூசலிட்டு, அவனிடம் போர்ச் செலவு கோரினான். குந்திராவ் மறுக்கவே, மாராட்டியத் தலைவன் அவன் படைகளையே கொள்ளையிட்டு அப்பணத்துடன் திரும்பினான்.

மீர் அலி ரஸாகானின் படைகளும் இச்சமயம் வந்து சேர்ந்தன. அவற்றுடனும் மக்தூம் படைகளுடனும் ஹைதர் குந்திராவை வேட்டையாடத் தொடங்கினான். கோட்டை கோட்டையாக அவன் சென்று புகலிடம் தேடினான். கோட்டையின் பின் கோட்டையாக எல்லாம் நஞ்சிராவ், ஹைதர் ஆகியவர் வசப்பட்டன.

மைசூரில் ஹைதர் அலி இல்லாததால், அரசன் ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குந்திராவின் வீழ்ச்சியை எதிர்பார்த்து, ஒவ்வொருவரும் தாமே அரசராகத் தலைப்பட்டனர். இக்குழப்பத்தில் அரசன் தன் குடும்பத்தையும் செல்வத்தையுமே பாதுகாக்க முடியாமல் பேரவதிக்காளானான். அரசனின் கையெழுத்துடன் அரசன் தாயும் பாட்டியும் ஹைதரை மைசூருக்கு அழைத்தனர்.

பெருந்தன்மை மிக்க வீர மைந்தனே! உன் வாள் வலியின்றி எமக்குப் பாதுகாப்பில்லை; புகலிடமில்லை. உன் வீரக் கரமின்றி இங்கே ஆட்சியும் செல்லாது; வாழ்வில் அமைதியும் நில்லாது. ஆகவே விரைந்து வந்து, எம் வீர மைந்தனாகும் பேற்றையும் ஆட்சிப் பொறுப்பையும் நேரடியாக ஏற்று, எமக்கும் நாட்டு மக்களுக்கும் நல் வாழ்வளிக்கக் கோருகிறோம்” என்று அரச இலச்சினையிட்ட அழைப்பிதழ் ஹைதரை நாடிவந்தது.

ஹைதர் தன் வீரவாழ்வில் முதல்தடவையாக, தன் வீரப்போக்கில் தயங்கினான். “கேளாதே வந்த இவ்வரும்பெரும் பொறுப்பை ஏற்பதா? மறுப்பதா?” என்ற பிரச்சினை எழுந்தது. ஏற்க அவன் விரும்பவில்லை; ஆனாலும் மறுக்க அவன்