பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 203

துணியவில்லை. மக்கள் அனாதை நிலையை அவன் எண்ணினான். மன்னன் அகதிபோல் அல்லலுறுவதைக் கண்டு அவன் உள்ளம் உருகினான். அவன் கண்முன் தன் நண்பனான வீர அமைச்சன் நஞ்சிராஜன் வீழ்ச்சிப்படலம் நாடகத் திரைக் காட்சிபோல் இயங்கிற்று. இவற்றையெல்லாம் சிந்தித்தபின் இறுதியில் அப்பொறுப்பை ஏற்பதென்று அவன் துணிந்தான்.

துணிவுக்கு ஆதாரமான அக்கடிதத்தை அவன் தன் மூலப்பத்திரமாகப் பத்திரப்படுத்தினான்.

குந்திராவிடம் இன்னும் ஏழாயிரம் குதிரைவீரர், பன்னிரண்டாயிரம் காலாள் வீரர், மானுவெல் என்ற வெள்ளையன் தலைமையில் 800 ஆங்கிலப் படைவீரர், பத்துப் பன்னிரண்டு பீரங்கிகள் ஆகியவை இருந்தன. அனால், அகப்படையாகிய வீரம் இல்லாதபோது, புறப்படைகளால் யாது பலன்? சூழ்ச்சியிலே நம்பிக்கை வைத்த அவன், தன் சூழ்ச்சிக் கோட்டை இடிந்ததும், அச்சத்துக்கு ஆளாகி ஓடினான். அவன் படை வீரரே அவன் கோழைமை கண்டு வெறுத்து அவனைப் பிடித்து மன்னனிடம் ஒப்படைத்தனர்.

குந்திராவுக்கு இப்போதும் ஒரு பலம் இருந்தது. அரண்மனைப் பெண்டிர் மனம் போல நடந்துகொண்டவன் அவன். அவர்கள் தம் பழைய கிலியை மறந்து, அவனை ஆதரிக்கத் தலைப்பட்டனர். தனக்கென ஒரு திட்டமற்ற மன்னனும் அவர்கள் போக்கில் நின்றான்.

ஹைதர் வீரப்போரை நிறுத்தினான். உள்ளூர அவன் மன்னன் குடும்பத்தின் அவல நிலை கண்டு நகைத்தான். தன் வீரருள் சிலரை வெற்றுத் தோட்டாக்களுடன் அனுப்பி, அந்தப்புரத்தின் மாடிமீது சுடும்படி ஆணையிட்டான். பெண்டிர் கோட்டை அல்லோலகல்லோப் பட்டது. மன்னனுக்குப் புதிய மனுக்கள் சென்றன. குந்திராவுக்கு மன்னிப்பும் உயிர்ப் பிச்சையும் வழங்கினால், ஹைதரிடம் முன்பு தெரிவித்தபடி அவன் பாதுகாப்பை ஏற்பதாக அரசன் இணக்கம் தெரிவித்தான்.

ஹைதர் உள்ளூர நகைத்தான். ஆனால், இணங்கினான்.