ஒப்பற்ற தியாகி
போஸின் வாழ்க்கை இடையூறுகளும் இன்னல்களும் நிறைந்தது. உலகின் மிகப்பெரிய வல்லரசு ஆன பிரிட்டிஷ் ஆட்சி தன் முழு வலிமையுடன் அவரை அடக்கப் பார்த்தது. தீவிர வாதியும் வணங்காமுடி மன்னருமான அவரை, நாட்டின் பிற்போக்குச் சக்திகளும் மிதவாத சக்திகளும் எப்பக்கத்திலும் நின்று தாக்கின. ஆனால் அவர் அவை எவற்றிற்கும் சளைக்கவில்லை. அவர் ஓர் ஒப்பற்ற தியாகி; நாட்டு நலனையும் விடுதலையையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர். ஆகவே உடல் நலிவு,சிறைவாழ்வு, நாடுகடத்தல், தடியடி முதலிய எல்லாத் துன்பங்களையும் அவர் வரவேற்றார். அவர் தம் நாட்டின் உயர்வுக்காகவே ஒவ்வொரு வினாடியையும் செலவிட்டார். அவரது ஒவ்வொரு மூச்சும் நாட்டின் மூச்சாகவே இருந்தது. 'என்பும் பிறர்க்கு உரிய’ராய்த் ‘தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்’ அவர்.
காந்தியடிகளும் போஸ் பெருந்தகையும்
நீண்டகால அடிமைத் தளையில் வாடிநின்ற இந்திரியடையே பிறந்து, உலகுக்கு இந்தியாவின் பெருமையை எடுத்துக்காட்டியவர் காந்தியடிகள். அதுபோலவே இந்தியாவின் வீரத்தையும் தன் மதிப்பையும் பாரறிய நிலை நாட்டியவர் போஸ் பெருந்தகை. இந்திய பிடி வெளி நாட்டாரிலிருந்து 1947 ஆகஸ்டு 15-இல் விடுதலை பெற்றது. அதுவரை இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்நாடு பிரிட்டிஷார் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 1858-இல் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் எழுந்தது. இதில் இந்தியர் அரிய பெரிய வீரச் செயல்கள் புரிந்தனர். ஆயினும் இறுதியில் அவர்கள் முறிவுற்றனர்.
"முன்னணி”வீரர்
அதன் பின் 1885-இல் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிற்று. நெடுநாளாக அரசியல் சீர்திருத்தம் கோரிய இப்பேரவை இயக்கம் பின்னால் தீவிரக் கிளர்ச்சியாகக் குமுறிற்று. அத்தீவிரப் புயலிலும் அதி தீவிரமாக முன்னேறிச் சென்று முன்னணியில் நின்று போராடியவர் போஸ். அவர் இந்தியாவில்