பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
244 ||

அப்பாத்துரையம் - 6




11. மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும்

மன்னர் பெரும்பாலும் ஆதிக்கம், ஆடம்பரம் இன்பவாழ்வு ஆகியவற்றிலேயே புரள்வர். அதையே மன்னர் வாழ்வு என்றுகூடக் கருதுவர். மன்னரின் இவ்வழியையே செல்வரும் இயல்பாக நாடுகின்றனர். குடியாட்சி நிலவும் இந்நாட்களில், மக்கட் பணியின் பேரால் உயர்பதவி பெறுபவர்களிடம்கூட, இவை இல்லாதிருப்பது அரிது. குடிமக்கள் ஆதரவு பெற்று உயர்ந்த அன்றே, உயர்வு பெற்றவர்கள் குடிமக்கள் வாழ்விலிருந்து நெடுந்துதொலை அகன்றுவிடுகிறார்கள். ஆனால், குடி மன்னனாகிய ஹைதர் வாழ்வும் ஆட்சிப் பாங்கும் இவ்வகையில் சிறந்த எடுத்துக்காட்டுக்கள் ஆகும். பொது மக்கள் வாழ்விலிருந்தும் படைவீரர் வாழ்விலிருந்துமே அவன் உயர்வு பெற்றான். ஆனால், உயர்ந்த பின்பும் பொதுமக்கள் வாழ்வின் எளிமையும் போர்வீரர் வாழ்வின் கடுமையும் அவனை விட்டு அகலவில்லை. அரசியலுக்கு இன்றியமையாத தருணங்களிலன்றி, அவன் ஆடம்பரத்தை விரும்பியது கிடையாது. கொலுமண்ட பத்திலும் சரி, போர்க்களத்திலும் சரி அவன் ஒரு படைவீரன் நிலைக்கு மேற்பட்ட எந்த உரிமையையும் ஏற்றுக்கொண்டதில்லை. இவ்வகையில் ஹைதருக்கு இணையாகக் கூறக் கூடிய மன்னர், விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே. தமிழகத்தில் ஒரு நக்கீரர்கால நெடுஞ்செழியன், ஒரு இராசராசன், வடபுலத்தில் ஓர் ஒளரங்கசீப், ஒரு சிவாஜி, பண்டை உரோமத்தில் ஒரு மார்க்கஸ் அரீலியஸ் ஆகியவர்களிடத்தில் மட்டுமே இப்பண்பை அருகலாகக் காண்கிறோம்.

ஹைதர் வாழ்வு கழிந்து இன்று பலதலைமுறைகள், பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஹைதர் குடிமரபு கூட ஆங்கில ஆட்சியாளரால் தடம் தெரியாமல் அழித்துத் துடைக்கப்