பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 259

சேகரக்காரர் அமைப்பே பின்னாட்களில் பத்திரிகை அமைப்பு ஏற்பட வழிகோலிற்று. ஒற்றர் படைத்தலைவன் என்ற முறையில்தான் அவன் மற்ற அரசர்களைவிட மிகுதியாகக் காலம், இடம், சூழல்களை நன்றாக உணரத் தக்கவன் ஆனான். இதுவே அவனைத் தென்னாட்டின் தேசிய வீரனாக்கிற்று.

ஹைதரின் குறைபாடுகளில் ஒன்று அவன் முன் கோபமே. இதுபற்றிய ஒரு சுவைகரமான செய்தி கூறப்படுகிறது. தம்பட்டசாலைத் தலைவன் அல்லது தாரோதா, செப்பு நாணயத்தின்மீது என்ன உருவம் பொறிப்பது என்று கேட்க வந்தான். ஏதோ சச்சரவிலீடுபட்டிருந்த ஹைதர், “போ, ஏதேனும் ஒழுக்கங்கெட்ட சித்திரம் பார்த்து பொறித்து வை” என்றான். அப்பாவி தாரோதா சொன்னபடியே ஒரு படம் உருவாக்கித் தம்பட்டமடித்தான். நாலைந்தாயிரம் நாணயம் அடிக்கப்பட்ட பின்னரே, சில பெரியோர்கள் ஹைதரிடம் வந்து அதுபற்றி முறையிட்டார்கள். அதன்மீது வெளியிடப்பட்ட நாணயங்கள் திரும்பியழைக்கப்பட்டு, உருக்கப்பட்டனவாம்!

ஹைதரின் பொன்னாணயம் 'ஹொன்' அல்லது பொன் என்பது. அதன் ஒருபுறம் 'ஹை' என்ற பாரசிக எழுத்தும்,மறுபுறம் புள்ளிகளும் பொறிக்கப்பட்டன. செப்பு நாணயங்களில் ஒருபுறம் யானை உருவம் பதிக்கப்பட்டது. நல்லமைப்புடைய ஹைதரின் யானை இறந்த பின், அதனிடம் உள்ள ஆழ்ந்த பற்றுக் காரணமாக அதன் நினைவாக அவ்வுருப் பொறிக்கப்பட்டதாக அறிகிறோம்.

ஹைதரின் அரச முத்திரையில் பொறிக்கப்பட்ட வாசகம், "ஃவதஃ ஹைதர் உலகை ஆளப் பிறந்தான். அலிக்கு நிகரானவனும் இல்லை. அவன் வாளுக்கு ஈடானதும் இல்லை" என்பது.

அவன் கைப்பொறிப்பில் ‘ஃவதஃஹைதர்' என்ற தொடர் இருந்தது.

பாரசீக மொழியில் எழுத்துக்கள் எண்களைக் குறிக்கும்.

ஹைதர் காலமான இஸ்லாமிய ஹிஜிரி ஆண்டை இவ்வாறு எழுத்தில் அடக்கி, அவ்வெண்களின் விவர நினைவுக் குறியாக,