5. குடியேற்ற நாட்டுரிமையா? முழுநிறை விடுதலையா?
வங்க சிங்கத்தின் 'வாரிசு'காங்கிரஸ் பதவிகள்
போஸ் மாந்தலேச் சிறை வாழ்விலிருந்து வங்க நாட்டு வாழ்வில் புகுந்த சில நாளைக்கெல்லாம் வங்க சிங்கம் ஸி.ஆர். தாஸ் உலக வாழ்வை நீத்தார். அவர் மறைவுடன் வங்க அரசியல் வானில் பேரிருள் சூழ்ந்தது போலாயிற்று. வங்க மக்கள் கண்ணீர் விட்டுக் கதறினர். தேச பந்துவாகிய அவர் வகித்து வந்த மாபெரும் பொறுப்புகளைத் தாங்க அவர்கள் அவர் அரசியல் மடிதவழ்ந்த சிங்கக் குருளையாகிய போஸையே எதிர்பார்த்தனர். அவரும் உடல் சற்று நலமடைந்தே வெளி வந்து அப்பொறுப்பை ஏற்றார். அவ்வாண்டிலேயே அவர் வங்க மாகாணக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்.
போஸ் விடுதலையான ஆறு மாதத்திற்குள் காங்கிரஸ் பேரவையின் ஆண்டுக் கூட்டம் சென்னையில் டாக்டர் அன்சாரி தலைமையில் கூடிற்று. இப்பேரவைக்கு வங்கத்திலிருந்து வந்த பிரதிநிதிக் குழுவையும் ஸிஆர் தாஸின் இடத்திலிருந்து போஸே தலைமை வகித்து வரவேற்றார். தேசியக் காங்கிரஸ் பேரவையில் தலைவர்களும் அவர்தம் ஒப்பற்ற தியாக வாழ்க்கையையும் திறனையும் பாராட்டி அவரைப் பண்டித ஜவஹர்லாலுடன் காங்கிரஸ் பொதுக் காரியதரிசியாக நியமித்தனர்.
1928: காங்கிரஸ் வரலாற்றில் ஒரு கட்டம்
1928-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டம் ஆகும். 1919-இல் இந்தியாவுக்குத் தரப்பட்ட மாண்ட்ஃபோர்டுச் சீர்திருத்தங்களின்படி10 ஆண்டுக்கு ஒருமுறை இந்திய நிலைமைகள் ஆராயப்பட்டு அவ்வனுபவத்தின் மீது