பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40 ||

அப்பாத்துரையம் - 6



இந்தியாவின் தேசியத் தொழிலாளர் அமைப்பான அகில இந்திய தொழிற்சங்க இணைப்புக்கு (All India Trade Union Congress) அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போஸ் இத்தொழிலாளர் அமைப்பின் தலைவராயிருந்த காலத்தில்தான் தொழிலாளர் அமைப்பு தேசிய அமைப்பாகிய காங்கிரஸுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது என்பது நினைவில் வைக்கத்தக்கது.

விடுதலை நாள் விழாவில் மீண்டும் சிறை

போஸ் விடுதலை பெற்றது 1930 செப்டம்பரிலேயே.ஆனால் 1931 ஜனவரியில் அவர் மீண்டும் மார்தாவட்டத்தில் சிறைப்பட்டார். லாகூர்க் காங்கிரஸுக்குப் பின் ஆண்டுதோறும் ஜனவரி 26 விடுதலை நாளாக நாடெங்கும் கொண்டாடப்படும் வழக்கம் ஏற்பட்டது. இவ்விழாவில் காங்கிரஸ் செயற்குழுவினர் திட்டப்படுத்திய விடுதலை மொழியுறுதி எங்கும் படித்து, மீண்டும் உறுதி செய்யப்பட்டது.1931ஆம் ஆண்டிலும் கல்கத்தா இவ்விழாவைப் பெருமுழக்கத்துடன் கொண்டாடிற்று. ஆனால், விழா ஊர்வலம் சட்டத்துக்கு மாறானதெனப் போலீஸ் அறிவித்தது. பரியூர்ந்த போலீஸ் படைகள் தடியடியால் கூட்டத்தைக் கலைத்தன. ஊர்வலத் தலைவரான போஸுக்கும் வேறு பலருக்கும் காயங்கள் ஏற்பட்டன.அவருடன் மற்றும் 11 பேர் சிறை செய்யப்பட்டனர். ஆனால் தண்டனைக் காலம் முடியுமுன் சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டுக் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆகவே, அவர்களை அரசாங்கம் விடுதலை செய்தது.

சட்ட மறுப்புப் போர் நிறுத்தம்

சட்ட மறுப்பியக்கம் நடக்கின்ற காலத்திலேயே தென் இந்திய நேர்மைக் கட்சியினர், மிதவாதிகள் ஆகியவர்கள் ஒத்துழைப்பின் மூலம் வட்டமேசை மாநாட்டின் முதல் கூட்டம் நடைபெற்றது. தாய்நாட்டில் எதிர்ப்பியக்கம் நடக்கும்போது அதன் அரசியலமைப்பை வெளியிலிருந்து உறுதிப்படுத்துதல் இயலுவதன்று என்று கண்ட வெள்ளையர் போராட்டத்தை நிறுத்திக் காங்கிரஸை அதில் ஈடுபடுத்த நினைத்தனர். ஸர். தேஜ்பகதூர்சாப்ரூ, எம்.ஆர்.ஜயகர் முதலிய வடநாட்டு மிதவாதத் தலைவர்கள் சிறையிலேயே காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துச்