பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுபாசு சந்திர போசு

|| 45

ஆட்சியாளர் இந்தியா பற்றித் தவறான எண்ணங்களைப் பரப்பித் தங்கள் ஆட்சியின் குறைகளை மறைத்துத் தங்கள் பிடியை வலுப்படுத்தப் பார்த்தனர். பட்டேலும் போஸும் அரும்பாடு பட்டு எல்லா நாடுகளிலும் இந்தியாவுக்கான பிரசாரம் நிலையங் களை அமைத்து நாட்டின் மெய்ந்நிலைகளை விளக்கினர். இத்துறையில் இவ்விரண்டு தலைசிறந்த இந்தியத் தலைவர்களும் இந்தியாவுக்குச் செய்த அரும்பணி மறத்தற்குரியதன்று.

1933 மே-யில் இந்தியாவில் மகாத்மா காந்தி மீண்டும் தம் இயக்கத்தை நிறுத்திச் சமரசம் பேசுகிறார் என்று தெரிய வந்தது. அச்சமயம் போஸும் பட்டேலும் அத்தகைய இயக்க நிறுத்தம் தவறானதென்று வற்புறுத்தி ஒரு பொது அறிவிப்பு விடுத்தனர். அச்சமயமுள்ள காங்கிரஸ் தலைமை நாட்டை முன்னோக்கி நடத்திச் செல்லத்தகுதியற்றதென்றும், தலைமை மாறவேண்டும் அல்லது கட்சியேனும் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் அவ்வறிவிப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

வெளிநாட்டுறவு, வெளிநாட்டுப் பிரசாரம் ஆகிய இரண்டு செய்திகளிலும் பண்டித ஜவஹர்லால் நேரு மிகவும் ஈடுபட்டுக் கவனம் செலுத்தி வந்துள்ளார். இவ்வகையில் அவருக்குப் பேரளவு வழிகாட்டிகளாய் இருந்தவர்கள் போஸும் பட்டேலுமே. அவர்கள் முயற்சியால் ஜவஹரின் அப்பிரசார முறைக்கு வேண்டிய அமைப்புகள் முன்னேற்பாடாக நிறுவப்பட்டிருந்தன.

புத்தியக்கம் மேனாட்டில்

போஸ் வியன்னாவிலிருக்கும்போது பிரிட்டனில் இந்தியர் களால் லண்டன் நகரில் எல்லாக் கட்சி இந்தியர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அதற்கு போஸையே தலைவராக வரும்படி இந்தியவர்கள் அழைத்தனர். போஸும் போகவிருந்தார். எனினும் பிரிட்டிஷ் அரசியலார் அவரை வரவிடவில்லை. ஆகவே அவர் தம் தலைமையுரையை எழுதியனுப்பினார். டாக்டர் என்பவர் அதை மாநாட்டில் வாசித்தார்.

இத் தலைமையுரையிலேயே போஸ் புரட்சிக் கருத்துகளையே மேற்கொண்ட தம் புதிய சங்க அமைப்பைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அவர் கொடுத்த பெயர் 'சமவாதியர் சங்கம்' என்பது. இந்தியாவின் விடுதலை உரிமையை எதிர்த்து