பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
46 ||

அப்பாத்துரையம் - 6



வந்த பிரிட்டனின் பழமை (Conservative) கட்சியார் இப்புது முயற்சி பற்றி அவதூறான பிரசாரம் செய்யத் தொடங்கினர். சிறப்பாக, நாஸியர் கோட்பாடுகளைப் புதுக்கட்சி ஆதரிப்பதாக அவர்கள் சாற்றினர். ஆனால் போஸ் “ஐரோப்பாவின் கட்சி எதுவானா லும் இந்தியா அதனை அப்படியே ஏற்க முடியாது. தம் நிலைமைக் கொத்த நல்ல முறைகளை எக்கட்சியிலிருந்தும் எடுத்துக் கொள்ளும். இதில் தவறு எதுவும் யாரும் கூறமுடியாது" என்று விடையிறுத்தார்.

போஸின் பிரசாரத்தின் வெற்றி பிரிட்டிஷ் அரசியலாரின் போக்கைப் பல தடவை மாற்றுமளவு வலிமையுடைய ய தாயிருந்தது. உலக மாநாடுகளில் பிரிட்டன் தனக்கு வேண்டிய இந்தியர் எவரையேனும் இந்தியாவின் பிரதிநிதி என அனுப்பி இந்தியாவைப் பற்றித் தவறான கருத்தைப் பரப்பியதுண்டு. வியன்னாவில் நடந்த ஒரு பொருளாதார மாநாட்டில் இந்தியாவுக்கு இத்தகைய போலிப் பிரதிநிதித்துவம் தரப்பட்டிருந்தது. 'இத்தகைய பிரதிநிதிகள் மூலம் ஏற்படும் விதிகள் இந்தியாவைக் கட்டுப்படுத்த மாட்டா' என்று போஸ் கண்டனம் விடுத்தார். ஆகவே அடுத்தபடியாக லண்டனில் கூடிய அதே மாநாட்டுக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பிரிட்டன் பிரதிநிதியை அனுப்பவில்லை.

மஸாரிக் இல்லம் : பட்டேல் மறைவு

ஜூலை மாதத்தில் போஸ் வியன்னாவிலிருந்து புறப்பட்டு ஜெக் தலைநகரமான பிரேக் சென்றார். இங்கும் நகரவைத் தலைவர் அவருக்கு வரவேற்பளித்தார். பத்து நாள் இங்கே தங்கிப் போஸ் இங்கும் நகரவை நடைமுறைகளைப் பார்வையிட்டார். நோயாளிகளுக்குச் செய்யப்படும் சிகிச்சை முறைகளையும் சிறப்பாகத் தொழுநோயாளிகள் நலவிடுதிகளான 'மஸாரிக் இல்லங்களை'யும் பிரேச் பல்கலைக்கழகம், உலகின் மிகப்பெரிய இரும்புத் தொழிற்சாலையான ‘ஸ்கோடா’த் தொழிற்சாலை ஆகியவற்றையும் அவர் சுற்றிக் கண்டார்.

பிரேசிலிருந்து போஸ் வியன்னாவுக்கு மீண்டும் வருவதற்குள் பட்டேலின் உடல்நிலை மிகவும் கேடடைந்து அவர் உயிர் நீத்தார். அவர் உடல் இந்தியாவில் அடக்கம்