பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுபாசு சந்திர போசு

|| 53

வராவதற்காக முன்மொழியப்பட்ட பெயர்கள் சுபாஷ் போஸ், மௌலானா அபுல்கலாம் ஆஜாத், பண்டித ஜவஹர்லால் நேரு, கான் அபுல் கபூர்கான் ஆகிய நால்வர். இத்தனைபேருமே தனித்தகுதியும் சிறப்பும் உடையவர்கள். அனைவரும் ஒப்பற்ற தியாகிகள். ஆயினும் போஸின் பெயர் கேட்ட உடனே மற்ற மூவரும் விலகி அவருக்கு ஒரு முக ஆதரவு காட்டினர்.கொள்கை வேறுபாடுகளிடையே கூடத் தியாகத்துக்குத் தனி மதிப்பு உண்டு என்பதைக் காங்கிரஸ் இத்தியாகிகள் தியாகச் செயல் மூலமே காட்டிற்று.

தலைவர் ஊர்வலம்

1938 ஜனவரி 14 போஸ் விமான மூலம் வந்திறங்கினார். காங்கிரஸின் தலைவர் என்ற சிறப்புரிமைகளுடன் நாட்டு மக்களும் நாட்டின் மாபெருந் தலைவர்களும் கராச்சி விமான நிலையத்திற்குப் பெருந்திரளாகச் சென்று அவரை வரவேற்றனர். தபதி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட ஹரிபுராக் காங்கிரஸ் நகருக்கு விட்டல் பாய் பட்டேல் நினைவுக் குறியாக விட்டல் நகர் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. வரவேற்புக் கழகத்தினர் பந்தலுக்குப் போஸை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். காங்கிரஸின் 51 ஆம் ஆண்டுப் பணியை நினைவூட்டும் வகையில் தலைவர் ஊர்தி 51 எருதுகள் பூட்டப்பட்டு 51 தேசியக் கொடிகளைத் தாங்கி 51 வாயில்களினூடாகச் சென்றது.விட்டல் நகரெங்கும் ஒரே குதூகலமாய்க் காணப்பட்டது. வெள்ளிய கதராடையணிந்த தலைவர்களும் தொண்டர்களும் நகரெங்கும் பரபரப்புடன் அலைந்து திரிந்த காட்சி வெண் மலர்களை நோக்கி வெண் சிறைத்தும்பிகள் நடமாடுவது போன்றிருந்தது.

பிப்ரவரி 13 தலைவர் வந்து சேர்ந்து தம் படை வீட்டில் அமர்ந்தார். அதனை அடுத்து மகாத்மா காந்தியின் குடிசையின் முன்பு பெரிய முந்நிறத் தேசியக் கொடியொன்றும் பறந்தது. மற்றொரு புறம் பண்டித ஜவஹர்லாலின் உறைவிடம் அமைந்திருந்தது. மூவர் குடில்களிலும் தலைவர் மாறி மாறிப் பெருந்திரளாகப் கூடிப்பேசினர். 14 செயற்குழுக்கூட்டமும், 16 அகில இந்தியக் காங்கிரஸ் குழுவின் கூட்டமும் நடைபெற்றன. காங்கிரஸ் குழுவின் கூட்டத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு முந்திய ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து விளக்கிய பின் புதிய