54 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
தலைவரைத் தலைமையேற்கும்படி வேண்டிக் கொண்டார்.வான முகடதிரும்படியான 'வந்தேமாதர’க் குரல்களிடையே போஸ் தலைமையிருக்கையிலமர்ந்தார்.
நாட்டு நெருக்கடியும் உலக நெருக்கடியும்
இக்காங்கிரஸ் கூடிய சமயம் இந்தியாவுக்கும் உலகுக்கும் மிக நெருக்கடியான சமயம் ஆகும். அரசியல் சிறையாளர் விடுதலை செய்யப்படாததைக் கண்டித்து இரு மாகாண முதல்வர்கள் மாகாணத் தலைவரிடம் பதவி துறப்புத்தான் அளித்திருந்தனர். ஐரோப்பாவிலோ இரண்டாம் உலகப் போர் மூளும் நிலையிலிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டியில் எண்ணற்ற தீர்மானங்கள் செய்ய வேண்டியிருந்ததில் வியப்பில்லை. காங்கிரஸிலும் கமிட்டியிலும் இடதுசாரியினர் தலைவர்களை நெருக்கித் தீவிர நடைமுறைகளில் ஈடுபடும் படி தூண்டி வந்தனர். பீகார், ஐக்கிய மாகாணங்களிலும் எதிர்ப்பியக்கம் நடத்தி அரசியலாரைத் தாக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினர்.
வரவேற்புக் கழகத் தலைவர் கோபால் தாஸ் போஸின் டைவிடாத தியாக வாழ்வைப் பாராட்டி, இந்தத் தலைவர் ஆட்சியின் கீழ்க் காங்கிரஸ் முன் என்றும் அடைந்திரா முன்னேற்றமும் வெற்றியும் உடையதாகுமாக என்று வாழ்த்தி யாவரையும் வரவேற்றார்.
தலைமையுரை
சுபாஷ் சந்திரபோஸ் பல்லாயிரக்கணக்கான மக்கட் கடல்களின் ஆரவாரங்களுக்கிடையே தம் உணர்ச்சி மிக்க தலைமையுரையை வாசித்தார். நாட்டுச் சூழ்நிலைகள், உலக நெருக்கடி நிலை, சென்ற காலப் பணிகள், வருங்காலத் திட்டங்கள் ஆகிய யாவும் அவரால் தெள்ளிய நடையில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன.
போஸின் நடுநிலைமையும் பொறுப்புணர்ச்சியும்
போஸ் தீவிரக் கருத்துக்களை உட்கொண்ட இக்காங்கிரஸின் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் தீவிரக்