சுபாசு சந்திர போசு ——————————————— |
|| 63 |
போனால் ஊழையும் உப்பக்கம் காண்பர். உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்” என்று வள்ளுவர் பெருமான் குறிப்பிட்ட ஊழ் கடந்த பெரியார்களுள் அவர் ஒருவர். அலெக்ஸாண்டர், ஸீஸர், நெப்போலியன் ஆகிய முதல்தர உலகப் பெரு வீரர்கள் வரிசையில் வைத்து அவர் எண்ணத்தக்கவர்.
மகான்களிடையே ஒரு மாவீரர்
திரிபுரி காங்கிரஸ் போஸ் அடைந்த படு வீழ்ச்சி போஸைத் தவிர வேறு எந்த அரசியல் தலைவரையும் முறியடித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய நெருக்கடியின் பின் அரவிந்தர் ஒரு துறவியானார்; வ.உ.சி. அரசியலில் நம்பிக்கையிழந்து, சமூகச் சீர்திருத்தவாதியானார். ஆனால் போஸ் காங்கிரஸை நம்பமுடியாத விடத்துத் தாமே காங்கிரஸாகித் தேசத்தை நம்பலானார். தேசம் பக்குவமடையாதது கண்டு தாமே தேசமாகி அரசியலும் படையும் அமைத்து ஆணவமிக்க பிரிட்டிஷ் வல்லரசை எதிர்த்துப் போரிடலானார். துணிச்சல் மிக்க இவ்வீரரின் வீரகாதை இந்தியா வரலாற்றிலும் காணாத, புராணத்திலும் காணாத புது இதிகாசமாகும். போஸின் வாழ்க்கை இந்தியாவின் நனவை மட்டுமின்றி, கனவையும் கடந்தது என்னல் வேண்டும்
'தேசிய முன்னணிக் கட்சி அமைப்பு
காங்கிரஸ் இயக்கத்துடன் மாணவர் இயக்கம், தொழிலாளிகள் இயக்கம், குடியானவர் இயக்கம், சமதர்மவாதிகள் இயக்கம், பொதுவுடைமை இயக்கம் ஆகிய எல்லா ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களையும் ஒன்றுபடுத்தவே போஸ் பாடுபட்டு வந்தார். காங்கிரஸ் மேலிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பில் அடிக்கடி வளர்ச்சியுறுவது கண்டும் அவர் ஓர் இடதுசாரி அணிவகுப்பு ஏற்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையிலேயே 1928 முதல் 1939 வரை காங்கிரஸின் ஓர் அங்கமாயிருந்து உழைத்தார். திரிபுரி காங்கிரஸ் மூலம் அவ்வொத்துழைப்புக்கு வழியில்லாமல் போகவே, காங்கிரஸுக்கு வெளியிலிருந்தே 'தேசிய முன்னணி' என்ற புது இயக்கம் தொடங்க முனைந்தார்.
காங்கிரஸிலிருந்து வெளியே துரத்தப்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவில் எத்தனையோ பேர்கள் உண்டு. அவர்களுள் வெளிய