சுபாசு சந்திர போசு ——————————————— |
|| 71 |
விடுதலைப் படையொன்று திரட்டுவதற்காகவே ஐரோப்பா வந்ததாகத் தெரிவித்தார். இந்தியாவின் சுதந்திரத்துக்கன்றி வேறு எவ்வகையிலும் அது வேலை செய்யாது என்றும், அதன் நிர்வாகம் யார் தலையீடுமின்றித் தன்னிச்சையாயிருக்க வேண்டும் என்றும் ஆகிய இரண்டு நிபந்தனைகளுடன் அஃது இயங்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஹிட்லர் அந்நிபந்தனைகளை ஏற்று அம்முயற்சிக்கு இணக்கமளித்தார்.
மேனாட்டு இந்திய விடுதலை இயக்க வரலாறு
இந்தியாவில் புரட்சி இயக்கத்திலீடுபட்டு வெளியேறின பலர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்தனர். இவர்களுள் பலர் இந்திய விடுதலைக் கழகங்களை நடத்தினர். முதல் உலகப் போரின் போது ராஜமகேந்திர பிரதாப் என்பவர் ஒரு விடுதலை அரசாங்கமே அமைத்திருந்தார். நம்பியார், க்பால் ஷடா, எம்.வி.ராவ் ஆகியவர்கள் ஜெர்மனியில் உழைத்து வந்தனர். ஃபிரான்சிலிருந்து ஓடிச்சென்ற அஜித் சிங் முஸாலினி அரசியலில் ரேடியோவின் பொறுப்பாளராயிருந்து உழைத்தார். இத்தாலி உலகப்போரில் ஈடுபட்டு ஆப்பிரிக்காவில் போர் நடத்திய போது இந்தியப் படை வீரர்கள் பெருவாரியாகச் சிறைப்பட்டனர். அவர்களில் சிலர் இத்தாலியிலுள்ள அஜித் சிங்கின் விடுதலைக் குழாத்தில் சேர்ந்தனர். மிகப் பலர் ஜெர்மனி சென்று போஸின் விடுதலை இந்தியப் படை (Froise Indian Logire)யில் சேர்ந்தனர்.
செப்டம்பர் மாதத்தில் சுபாஷ் ஜெர்மன் அரசாங்கத்தால் அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்ட விமானத்தில் ஏறி ஃபிரான்சு, இத்தாலி,ஹாலந்து ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார். நாஜியர் கட்சிக் கோட்பாடுகளை எதிர்த்த பல இந்தியர்கள் சிறையிலிருந்தனர். இந்தியாவில் விடுதலைக்கு உழைப்பதில் அவர்களிடையே கருத்து வேற்றுமையில்லையென்று கண்ட போஸ் தம் சொந்தப் பொறுப்பில் அவர்களை விடுதலை செய்யும்படி அவ்வவ் அரசாங்கங்களைக் கோரினார். இவர்களனைவரையும் சேர்த்து 1941 அக்டோபரில் பெர்லினில் ஐரோப்பிய இந்தியர் மாநாடு ஒன்று கூட்டினார்.