பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுபாசு சந்திர போசு

|| 75

புறப்பட்டார். தென் ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்து மகா கடல் வந்ததும் ஜப்பானிய நீர் மூழ்கி ஒன்று அவரைச் சந்தித்து இட்டுக் கொண்டு பினாங் வந்து சேர்ந்தது. அங்கிருந்து அவர் விமானத்தில் டோக்கியோ வந்து சேர்ந்தார்.

கிழக்காசிய விடுதலை இயக்க வரலாறு

கிழக்காசியாவில் ராஷ்பிஹாரி போஸ் தலைமையில் இயங்கிய விடுதலை இந்திய இயக்கச் சார்பில் பாங்காக்கில் ஒரு மாநாடு நடைபெற்றிருந்தது. 1943 ஜூலை 4-ஆம் தேதி ராஷ்பிஹாரி தலைமையில் இரண்டாவது மாநாடு சிங்கப்பூர் அல்லது ஷோனானில் நடைபெற்றது. சுபாஷைப் பிஹாரி அறிமுகம் செய்து வைத்து அவரிடமே இந்திய விடுதலைக் குழாத்தின் தலைமையை ஒப்படைப்பதாகக் கூறினார். போஸ் இம்மாநாட்டில் போர் நிலைமை, இந்திய நிலைமை ஆகியவற்றை விளக்கி இந்திய விடுதலைக்காகத் தாம் இந்திய தேசியப் படையும் தற்காலிக விடுதலை இந்திய அரசாங்கமும் அமைக்க விரும்புவதாகவும் அதற்கான ஒத்துழைப்பைக் கிழக்காசிய இந்திய மக்கள் தருவர் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.

பல்துறைத் தலைவர்

சுபாஷ் போஸ் இந்தியாவில் சொற்பொழிவுப் பிரச்சாரமும் சட்ட மறுப்பும் மட்டுமே செய்து வந்தார். ஆனால் கிழக்காசியாவில் இந்திய விடுதலை இயக்கத்தில் எல்லாமுமாய் எல்லா இடத்திலும் இருந்து அவர் எல்லாப் பணிக்கும் தாயகமாயிருந்தார். அரசாங்கம், பிரசாரம், சொற்பொழிவு, படைத் தலைமை, நிர்வாகத் தலைமை ஆகிய அனைத்தின் பொறுப்பையும் அவர் ஒருவரே ஏற்று நடத்தினார். இளமையில் சமயப் பற்றிலாழ்ந்து துறவியாய் இமயமலை சென்ற இளைஞர் இத்தனை துறைகளையும் இயக்கும் இயக்கும் தனிப் பெரும் வீரராயிருப்பார் என்று யாவரே குறி கூறியிருக்க முடியும்!

1943 ஜூலை 5-ஆம் தேதி நடைபெற்ற விடுதலை இந்தியப் படை அணி வகுப்பில்தான் போஸ் முதல் தடவையாக 'செல்க செல்க தில்லி நோக்கி (தில்லி சலோ)' என்ற வீரமுழக்கம் செய்தார். அதற்கடுத்தநாள் இ.தே.ரா அல்லது இந்திய தேசிய