78 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
போர் முறையையொட்டி அவர்களைத் திட்டமிட்டுப் பின்வாங்கும்படி போஸ் கட்டளையிட்டார் நோயும் கடுந்தொல்லைகளும் இப்போது தளர்ச்சியுற்ற வீரர்களை வாட்டி வதைத்துப் பெரும்பலி கொண்டன. தப்பிப் பிழைத்த வீரர்கள் மாந்தலேக்கும் மெனியோவுக்கும் சென்றனர்.
இருநூறு ஆண்டுகளாகத் தம் தலைவர்களுக்கன்றித் தமக்கெனப் போரே அறியாதும், இந்தியத் தலைமையதி காரிகளைக் கூடப் பெறாதும் இருந்த இந்தியர் தமக்கென அத்தலைவரை எதிர்த்து 1944-இல் முதல் முதல் போரிட்டனர். அம்முதற் போரே அவர்களுக்குப் பேரளவு வெற்றி தந்தும் இந்தியாவில் அதற்கான ஆதரவு எழுவதற்குத் தலைவர்கள் தயாராயில்லாததால் வெற்றி தொடர முடியாமல் போயிற்று. ஆயினும் சூழ்நிலை கிடைத்தால் இந்தியர் தம் நாட்டுக்காகப் போரிட்டு வெற்றி பெற முடியும் என்பதை அரக்கான், அம்பாய்ப் போர் முனைகள் உலகுக்குத் தெளிவுபடுத்தின.
தளர்விலும் தலைவர்!
இ.தே.ரா.வின் பின்னடைவின்போது தலைவர் பெருந்தகை போஸ் காட்டிய தீரம் வெற்றி நாளிலும் பன்மடங்கு அவர் தலைமைத் தகுதியைக் காட்டுவதாயிருந்தது. அவர் படை வீரருடன் படை வீரராயிருந்து தம் துன்பம் பாராமல் யாருக்கும் வேண்டிய உதவிகளும் தயாரிப்புகளும் செய்வதில் ஈடுபட்டார். மருத்துவ விடுதிகளை மேற்பார்வையிட்டுக் காயமடைந்தோர் களுக்குத் தக்க ஏற்பாடுகள் செய்தார். அவ்வாண்டு முடிவில் அவர் மீண்டும் கிழக்காசியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களுக்கு ஊக்கமளித்துக் கடைசிப் போராட்டத்திற்கு ஆயத்தம் செய்தார். விஷன்பூர் (விஷ்ணூபுரம் இம்பால் கொஹிமாத் தொடர்புகளை ஊடறுத்துவிட்டால் இந்தியாசெல்ல வழியேற்படும். இதுவே இவ்விறுதி உயிர்ப் போராட்டத்தின் குறிக்கோளாயிருந்தது. ஆனால் பிரிட்டிஷ் படையும் மாந்தலே. மத்திய பர்மாவைப் பிடிக்கத் திட்டமிருந்தது. ரஷ்ய - ஜெர்மன் போராட்டத்தை ஒத்த கத்திரிக்கோல் போர் முறை நிகழ்ந்தது. இரு திறங்களும் நெடுநாள் தெளிவான வெற்றியின்றிப் பூசலிட்டன. ஆனால் மறுபடியும் இ.தே.ரா. அதிகாரிகள் சிலர் சரியால் நிலைமை மெள்ள மெள்ள இந்தியருக்கு மாறாயிற்று.