பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

85

ஒன்று மற்றொன்றாகக் கூடுமாதலின், இரண்டும் அடிப்படையில் ஒன்றே என்று முடிவு செய்தார்.

இங்ஙனம் அறிவியல் உலகில் ஐன்ஸ்டீன் செய்த மாறுபாடுகள் புரட்சிகரமானவை. அளவிறந்தவை. ஆனால், அறிவியல் உலகில் செய்த இதே புரட்சியை அவர் வேறு பல துறைகளிலும் கூடத் தொடங்கி வைக்கத் தவறவில்லை.

உலகையும் இயற்கையையும் முழுவடிவில் ஆராய முற்பட்ட மெய்விளக்க அறிஞர்கள் லோக்,(Locke) ஹியூம்(Hume), பார்க்லி (Berkeley), டார்வின்(Darwin), கான்ட்(Kant) முதலியவர்கள். அவர்கள் வரிசையிலும் வைத்தெண்ணத்தக்க, மாபெரு மெய் விளக்க அறிஞராக ஐன்ஸ்டீன் ஒளி வீசுகின்றார்.

முழுநிறை மனிதர்

அறிவியல் ஆராய்ச்சி அறிஞர், மெய்விளக்க அறிஞர் ஆகியோர் பெரிதும் ஆய்வுக் கூடங்களிலும் (Laboratories) அறிவகங்களிலும் (Scientific Societies) அடைபட்டுக்கிடப்பவரே யாவர். உலக வாழ்விலோ, வாழ்க்கைச் செய்திகளிலோ அவர்கள் ஆராய்ச்சிக் கண்ணோட்டம் செலுத்து வதில்லை. அக்கறைகூடக் காட்டுவதில்லை. ஆனால், ஐன்ஸ்டீன் முழுநிறை அறிவியலறிஞ ராகவும், மெய்விளக்க அறிஞராகவும் மட்டும் வாழவில்லை. முழுநிறை மனிதராகவும் வாழ்ந்தார்.

அவர் சமயங்களுக்கு அடிமைப்படவில்லை. ஆனால், பெரும்பாலான அறிவியல் அறிஞர்களைப் போலவோ, மெய் விளக்க அறிஞர்களைப் போலவோ, அவர் சமய வாழ்வைப் புறக் கணித்து வெறுத்தொதுக்கவும் இல்லை. அவர் ஆழ்ந்த சமய உணர்வுடனும், சமரச உணர்வுடனும் வாழ்ந்தார். அதே சமயம் சமயங்கள் வேறு, சமய உணர்வு வேறு என்ற அடிப்படை உண்மை யை அவர் அறிந்தார். அதை அவர் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்கினார்.

என்று

அறிவியல் அல்லது பகுத்தறிவும் சமயம் அல்லது பற்றார்வமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை கருதுபவரே உலகில் பலர். தாழ்ந்தபடிச் சமயவாழ்வும், தாழ்ந்தபடி அறிவியல் வாழ்வும் தத்தம் குறைபாட்டால் முரண்படுவது உண்மையே. ஆனால், உயர்தரச் சமய உணர்வும்,