90
அப்பாத்துரையம் - 7
தந்தையர் குடி பெயர்ந்து மியூனிச்(Munich) நகருக்குச் சென்றனர். இங்கே அடுத்த ஆண்டு அவர்களுக்கு மஜா(Maja) என்ற மற்றும் ஒரு பெண்குழந்தை பிறந்தது. ஐன்ஸ்டீன் இளமையின் முற்பகுதி முழுவதும் இந்நகரிலேயே கழிந்தது.
எலிஸா(Eliza) என்ற மைத்துனிமுறை உடைய பெண் ஒன்றும் மியூனிச்சில் சிலகாலம் அவர்களுடன் இருந்தது. இப் பிற்காலத்தில் ஐன்ஸ்டீனின் ரண்டாவது
பெண்
வாழ்க்கைத்துணைவி ஆனார்.
ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனின் தந்தை ஹெர்மன் ஐன்ஸ்டீன் (Hermann Einstein) என்பவர். அன்னை பாலின்(Pauline) என்பவர். ஹெர்மன் ஐன்ஸ்டீன் ஒரு சிறு மின்காந்தத் தொழிற்சாலை வைத்து நடத்தினர். இதில் அவருடன் அவர் உடன் பிறந்தாரும் உழைத்தார்.ஹெர்மன் தொழிற்சாலையின் வாணிகத் துறையைக் கவனித்துக் கொண்டார். அவர் உடன் பிறந்தாரே தொழில் துறையைப் பார்த்து வந்தார்.
ஐன்ஸ்டீன் குடும்பத்தினர் யூத மரபினர். ஆனால், ஆ மரபுகாரணமாக அவர்களுக்கு எத்தகைய குறையும் ஜெர்மனியில் அக்காலத்தில் இல்லை. தென் ஜெர்மானியரின் சமரச வாழ்வில் மதவேறுபாடும் இனவேறுபாடும், அன்று புகவில்லை. இக்காரணத்தால் யூதரும் முனைப்பாக யூதராக வாழவில்லை. யூதரல்லாத பிறரும் தாம் வேறு, யூதர் வேறு என்ற எண்ணம் கொள்ளவில்லை.
ஐன்ஸ்டீனின் தந்தை தொழில்துறையில் அடிக்கடி தோல்விகள் கண்டார். வறுமை அவர் குடும்பத்தை வாட்டிற்று. ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. தோல்விகளைத் தட்டிக் கழித்து விடும் பண்பு அவரிடம் இருந்தது. ஆனால், அவர் உடன்பிறந்தார் அவரைவிட அறிவியலறிவும், ஆர்வமும், தொழில் திறமும் உடைய வராயிருந்தார். ஐன்ஸ்டீனின் அன்னையாரும் இனிய குணமும் நகைத்திறமும் வாய்ந்தவரா யிருந்தார். ஐன்ஸ்டீன் வாழ்க்கையின் அறிவார்வத்துக்கு அவர் சிற்றப்பனாரும், கலைப் பண்புக்கும் நகைத்திறத்துக்கும் அவர் அன்னையாரும் பெரிதும் துணை தந்தனர் எனலாம்.