பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

அப்பாத்துரையம் - 7

முயன்றார். ஆயினும் ஐன்ஸ்டீன் மியூனிச்சிலேயே தம் பள்ளிப்படிப்பை முடிக்கும்படி தந்தை அவரை அங்கே விட்டுச்சென்றார்.

உயர்தரப்பள்ளி இறுதித்தேர்வின் நற்சான்றில்லாமல், எவரும் பல்கலைக் கழகத்துக்கோ, உயர்தரப் பணிகளுக்கோ போக முடியாது. ஆனால் பள்ளி இறுதித் தேர்வு ஐன்ஸ்டீனுக்கு ஓர் எட்டிக் கனியாகவே அமைந்தது. கணக்கியல் ஒன்றில் அவர் பள்ளிப்பாடம் கடந்து மிகவும் திறமையுடையவராயிருந்தார். கிரேக்கம் (Greek) இலத்தீனம் (Latin)முதலிய பண்டை மொழிகளிலும் இலக்கணங்களிலும் அவர் சிறிதும் முன்னேற முடியவில்லை. எப்படியாவது உயர்தரப் பள்ளியைவிட்டு ஒழிய அவர் சூழ்ச்சி செய்தார்.

அவர் ஒரு மருத்துவரை அணுகினார். "பள்ளிப் படிப்பே உடல் நிலைக்கு ஒத்துக்கொள்ளாது. ஆறுமாதமாவது இத்தாலியி லிருந்தா லல்லாமல் தேர்வுக்குச் செல்லவும் முடியாது,” என்று ஒரு நற்சான்று பெற்றார். இதே சமயம் பள்ளியின் இரும்புக்கட்டுப் பாடுகள் ஐன்ஸ்டீனின் மனம் போனபோக்கால் தடைபடுவதாகவும், பிற பிள்ளைகளும் அவரால் கெடுவதாகவும் பள்ளித்தலைவர்கள் கருதி அவரை அகற்ற முனைந்திருந்தனர். இதனால் பள்ளியிலிருந்து அவர் எளிதாகவே விலகிச்செல்ல முடிந்தது.

கணக்காசிரியர் ஒருவர்மட்டும் ஐன்ஸ்டீனை உயர்வாக மதித்திருந்தார். அவரிடமிருந்து ஐன்ஸ்டீன் ஒரு நற்சான்று பெற்றுக்கொண்டார்.

இசையார்ந்த இத்தாலி

பதினைந்தாவது வயதிலேயே ஐன்ஸ்டீனுக்கு ஜெர்மனியின் பள்ளி வாழ்வும், ஜெர்மனியும் நரகமாகத் தோற்றத் தொடங்கி விட்டன. ஆனால், இத்தாலி(Itlay)அவருக்குப் பொன்னுலகாக விளங்கிற்று. அவர் தந்தையை வற்புறுத்தி, ஜெர்மனி குடியுரிமை யையே உதறித் தள்ளிவிட்டார். தந்தையும் மகனின் இந்தப் பிடிமுரண்டுக்கு எப்படியோ இணங்கினார்.

இதுமுதல் இன்னொரு நாட்டின் குடியுரிமை பெறும் வரை, அதாவது 15 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப் பட்ட ஆறாண்டுக்