3. பெர்ன் பதிவுரிமை நிலையம்
(1902 - 1909)
ஐன்ஸ்டீன் வாழ்க்கையின் முதல் திரும்பு கட்டமும், முதன் மையான திரும்புகட்டமும் பெர்ன் பதிவுரிமை நிலையப் பணியே யாகும். அவர் 1902-ம் ஆண்டு முதல் 1909-ம் ஆண்டுவரை அதில் ஈடுபட்டிருந்தார். பணியில் நுழையும் போது அவர் இளைஞராக, புகழும் அனுபவமும் அற்றவராக, தன்னம்பிக்கையற்ற நிலையில், வாழ்வின் இருளில் தடவிக்கொண்டு தள்ளாடியவராக விளங்கினார்.ஆனால், அதை விட்டு வெளிவரும்போது மனைவி மக்களுடன், புகழொளியின் புன்முறுவலிடையே, வெற்றிமேல் வெற்றி நோக்கி வெளியேறினார். அதற்குமேலும் அவர் வாழ்க்கையில் துன்பங்களும் நெருக்கடிகளும் ஏற்படாமலில்லை. ஆனால், பெர்ன் வரும்போது இருந்த தன்னம்பிக்கையற்ற நிலை பின் என்றும் ஏற்படவில்லை. அவர் வாழ்க்கையின் குறிக்கோள் அதற்குப்பின் ஒரே குறிக்கோளா யிற்று. பெர்னில் வெற்றி கரமாகத் தொடங்கிய ஆராய்ச்சிகளை முழுநிறைவு படுத்துவதே அவர் வாழ்நாள் பணியாயிற்று.
பதிவுரிமை நிலையத்தின் வேலை அவருக்குப் பிடித்திருந்தது. அதேசமயம் அது அவர் வறுமையைப் போக்கி, அவர் வாழ்வின் படித்தரத்தை நிலையாக உயர்த்திற்று. பணியில் அவர் பெற்ற ஊதியம் 3000 ஸ்விஸ் வெள்ளி; ஃப்ரான்க்ஸ்' அதாவது கிட்டத்தட்ட 600 இந்திய வெள்ளிகள் ஆகும். இவ் வளமான வருவாய் மூலம் அவர் குடும்ப வாழ்வுபற்றி எண்ண அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது.
திருமணம்
தம்முடன் ஜூரிச்சில் பயின்ற ஸெர்பிய நங்கை மிலேவா விடமே அவர் மனம் சென்றது. வாழ்வைத் தேடுவதைத் தவிரத்