அப்பாத்துரையம் – 7
104 || ஏற்பட்டதென்றே கூறவேண்டும். உண்மையில் ஐன்ஸ்டீன் உள்ளம் என்றும் குழந்தை உள்ளமாகவே இருந்ததனால், குழந்தைகளிடம் அவர் ஈடுபாடு எப்போது மிகுதியாகவே இருந்தது.
பணிமனை வாழ்விலும் குடும்பவாழ்விலும் இக் காலத்தில் ஐன்ஸ்டீன் ஒருங்கே மனநிறைவுடையவராக இருந்தார். அவர் வாழ்வில் பின்னாளில் புகழ் இதற்கு மேற்பட எவ்வளவோ வளர்ந் தாலும், இச்சமயம் அவர் அனுபவித்த இனிய வாழ்க்கை அமைதியை எப்போதுமே அவர் அடைந்ததில்லை என்னலாம். இக்காலத்தின் நடுப்பகுதியில் 1905-ல் ஓர் ஆண்டுக்குள் அவர் முடித்த செயல்களின் அளவிலும், அருமை பெருமைகளிலும் நாம் இதைத் தெளிவாகக் காணலாகும். இதுவரை நண்பரிடையே மட்டும் மதிப்படைந்திருந்த அவர் இந்த ரே ஆண்டின் ஆராய்ச்சி வெளியீடுகளால் திடுமென உலகளாவிய புகழ் அடைந்தார்.
செய்து
ஓர் ஆண்டின் சாதனைகள்
66
9
"இயங்கும் பொருள்களின் மின்காந்த இயக்கங்கள்,”5 "ஆற்றலின் தடை எதிர்ப்பாற்றல்,”6 “பிரௌண் கண்ட இயக்கத்தின் ஒழுங்கமைதி” “ஒளியின் தோற்றமும் மாறுபாடும்; அதுபற்றிய பயன் மிக்க மதிப்பீடு,”8 "அணுத்திரளின் பருமான அளவைகளை அறுதியிடுவதற்குரிய ஒரு முறை ஆகிய இத்தனை புரட்சிகரமான ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஓர் ஆண்டுக்குள் ஐன்ஸ்டீனின் மூளை என்னும் அறிவுத் தொழிற் சாலையிலிருந்து வெளிவந்த வெளிவந்த புதுப் படைப்புக்கள் ஆகும்.
இப் புத்தாராய்ச்சிகளில் “ஒளியின் தோற்றமும் மாறுபாடும் பற்றிய பயன்மிக்க மதிப்பீடு," என்ற இறுதி வெளியீடு ஜூரிச் பல்கலைக் கழகத்தாரின் கவனத்தை ஐன்ஸ்டீன் பக்கம் திருப்பிற்று. அப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கிளைனர்0 ள ஆராய்ச்சி யாளரான ஐன்ஸ்டீனின் அருந் திறமையை முதல்முதல் கண்டுணர்ந் தவராவர். அவர் ஆதரவில் பல்கலைக் கழகம் ஐன்ஸ்டீனுக்கு “மெய்விளக்கத்துறை முனைவர்” என்ற பட்டம் அளித்துப் பெருமைப்படுத்திற்று.
""11