அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
(105
பேராசிரியர் கிளைனர் ஐன்ஸ்டீன் பெருமையை 1901-லேயே அறிந்துகொண்டிருந்தார் என்று அறிகிறோம். அவ்வாண்டில் ன்ஸ்டீன் ஷாஃவ் ஹௌஸனில் வீட்டாசிரியப் பணிதான் செய்து கொண்டிருந்தார். 'வளிகளின் விசையாற்றல் கோட்பாடு பற்றிய' ஐன்ஸ்டீன் கட்டுரையை2 அவர் காண நேர்ந்தது. அதைப் பேராசிரியர் உயர்வாக மதித்தபோதிலும், உலகியல் தொடர்பு களை முன்னிட்டே அம் மதிப்பை வெளியிடுவது நன்றன்றென அடங்கியிருந்தார். ஏனெனில் அக்கட்டுரை பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் கிளைனருடன் உழைத்த லட்விக் பொல்ட்ஸ்மன்13 என்ற மற்றொரு புகழ்பெற்ற பேராசிரியர் கருத்துக்களை முனைப்பாகக் கண்டிப்ப தாயிருந்தது.
பேராசிரியர் அவா
புகழ்பெற்ற ஆராய்ச்சியறிஞரைத் திகைக்க வைக்கும் புத்தாராய்ச்சியுடைய இளைஞரொருவர் ஒரு பணிமனையில் இருந்து வேலை செய்வது பேராசிரியர் கிளைனருக்குப் பிடிக்க வில்லை. அந்நிலை பொதுவாகப் பல்கலைக் கழகங்களுக்கும், சிறப்பாக அருகாமையிலிருந்த ஜூரிச் பல்கலைக் கழகத்துக்கும் மதிப்பளிப்பதல்ல என்று அவர் கருதினார். முனைவர் பட்டத்தை அளித்ததன் மூலம் ஜூரிச் பல்கலைக் கழகம் இக் குறைபாட்டை அரைகுறையாகவே அகற்றிய தெனவும் அவர் எண்ணினார். ஆகவே பல்கலைக் கழகத் துடனும், மாணவருடனும் இன்னும் மிகுதி தொடர்பு கொண்டு தம் ஆராய்ச்சி அறிவை ளைஞருலகுக்கும் பயன் படுத்தும்படி அவர் ஐன்ஸ்டீனைத் தூண்டினார். அவரைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக்கும் முயற்சியில் அவர் முனைந்தார்.
ஆனால், பேராசிரியர் விருப்பம் பல்கலைக் கழகத்தின் இரும்புச்சட்ட விதிமுறைகளைத் தளர்த்திவிடப் போதுமான தாயில்லை. ஆசிரியராக நீடித்த அனுபவம் பெற்ற பின்னரே ஒருவர் ஜூரிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் உரிமை பெற முடியும். அவ்வுரிமைக்காகச் சம்பளமில்லாமல் உழைத்த வண்ணம் எத்தனையோ இளைஞர் காத்துக்கொண்டிருந்தனர். பேராசிரியர் கிளைனர் விருப்பம் நிறைவேற வேண்டுமானால், ஐன்ஸ்டீனும் இவ்வாறு காத்திருக்கவேண்டும். ஆனால் மற்றச் செல்வ ளைஞரைப் போல ஐன்ஸ்டீன் சம்பளமில்லாத