பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

[109

அவர் மதிக்கவு மில்லை; காட்டவும் இல்லை. இது அவர்ருக்கு இயற்கையாய் அமைந்து விட்டது. உயர்வு தாழ்வுப் படிவரிசை களிலே அமைந்த உலக வாழ்வில் - சிறப்பாகப் பல்கலைக் கழக வாழ்வில் - இது எவ்வாறு பொருந்தும்?

அவர் விரும்பியபோது உழைத்தார். விரும்பியபடி உழைத்தார். புகழை விரும்பவில்லை. பதவி உயர்வை விரும்பவில்லை. இதனால் ஆசிரியப் பணியின் நாள்முறைத் திட்டங்களை அவர் முனைப் பாகக் கவனிக்க முடியவில்லை. ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அவர் அடிக்கடி அதிலேயே தன்னை மறந்து இருந்துவிடுவார். பணியின் கட்டுப்பாடுகளை இதனால் அவர் பின்பற்ற முடியவில்லை.

பதவிமேல் பதவி

இத்தகைய சூழலில் பேராசிரியப் பதவி அவர் ஆராய்ச்சிப் புகழுக்குரிய ஒரு பரிசாக அமைந்ததேயன்றி, அவர் வாழ்க்கைப் பணியாய் அமையவில்லை. ஆனால் இக் காரணத்தால் பேராசிரியப் பதவிகள் அவரை நாடாமல் இல்லை. ஆராய்ச்சிப் புகழ் பேராசிரியர் பதவியைவிடப் பெரிது. ஜூரிச் பல்கலைக் கழகம் இதை விரைவில் காணலாயிற்று.

பல்கலைக்கழகங்கள் எல்லாம் ஜூரிச் பல்கலைக்கழகங்களாக இல்லை புகழ்பெற்ற ஆராய்ச்சியறிஞரான அவரைப் பேராசிரியராகப் பெறும் புகழை அவாவி, பல்கலைக் கழகங்கள் விரைவில் ஒன்றுடனொன்று போட்டியிட்டன.

அவர் வாழ்வின் மிகப் பெரும் பகுதி பேராசிரியப் பணிலேயே கழிந்தது.

அது அவர் ஆராய்ச்சிப் புகழை வளர்ப்பதாய் அமைய வில்லை. அதன் பரிசு மட்டுமே! ஆனால், அவர் ஆராய்ச்சி களுக்கான வாய்ப்பு வளங்களை அவை அளித்தன. 1905-ல் தோன்றிய பல்வேறு ஆராய்ச்சிகளின் கரு, அவர் வாழ்நாள் முழுவதும் முதிர்ச்சியுற்று வளர்ந்தது. அறிவியல் உலகையே அடையாளம் தெரியாமல் மாற்றவல்ல ஆராய்ச்சிப் புரட்சிகளாக அவை மலர்ச்சியுற்றுக் கனிவளம் தந்தன.