112 ||
ஜூரிச் பேராசிரியர் பணி
மூலம்
அப்பாத்துரையம் - 7
சமுதாயத்தில்
ஜூரிச் பேராசிரியப்பணி ஐன்ஸ்டீனின் மதிப்பு உயர்ந்தது. கற்றறிந்த பெருமக்கள் சூழலில் அவருக்கு இடம்கிடைத்தது. ஆயினும் இதனால் அவர் பொருள் நிலையோ, குடும்பநிலையோ சிறிதும் உயரவில்லை. ஏனெனில் இப்பேராசிரியப் பதவி இன்னும் சிறப்புரிமைப் பதவியே (Post of Professor Extrordinoory) நிலையான பதவிக்குரிய மதிப்பு அதற்குண்டு; ஊதியம் நன்மதிப்பூதியமே. (Honorariun) எனவே பொருள் முறையில் அவர் வருவாய் பதிவுரிமை நிலைய ஊதியத்தைவிட மிகுதியாயில்லை. அதே சமயம் பதிவுரிமை நிலையத்தின் பணியாளராக வாழ்ந்தபோது இல்லாத மதிப்பையும் செலவையும் அவர் வாசிக்கவேண்டி வந்தது. முன் இல்லாத பகட்டார வார உடை இப்போது அவசியமாயிற்று. முன் நடந்துசெல்லும் இடங்களுக்கு இப்போது ஊர்திமீது செல்லுவது இன்றியமையாத தாயிற்று. இக் காரணங்களால் மதிப்பு உயர்ந்தும், குடும்பத்தில் மீண்டும் ஓரளவு பண நெருக்கடி ஏற்பட்டது.
ஐன்ஸ்டீன் இக்காலத்தில் தமக்கு இருந்த முட்டுப்பாடுபற்றி நகைச்சுவை ததும்பத் தம் நண்பரிடம் பேசுவது வழக்கம். “தொடர் புறவுக்கோட்பாட்டைப் பற்றிய என் விளக்கத்தில் இயற்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நான் ஒவ்வொரு மணிப்பொறி ஏற்றி வைத்தேன். ஆனால், என் இல்ல முழுமைக்கும் என்னால் ஒரு மணிப்பொறி கூட மாட்டிவைக்க முடியவில்லை,” என்று தம்மிடம் மணிப் பொறியில்லாக் குறைபாட்டை அவர் இனிது சுட்டிக் காட்டினார்.
அவர் ஆராய்ச்சிகளில் செலவிட்ட நேரத்தில் ஒரு சிறு பகுதியாவது இப்போது வீட்டின் செலவுகளைக் குறைப்பது எப்படி என்பதில் சென்றிருக்க வேண்டும். ஆனால், இதில் திருமதி ஐன்ஸ்டீன் ஒத்துழைப்பு மிகவும் பயனுடையதாயிருந்தது. அவர் மாணவர் கட்கு இடவசதியும், உணவு வசதியும் செய்து தந்து தம் செலவைச் சரி செய்துவந்தார்.
பல்கலைக் கழகத்தில் பேராசிரியப் பணியுடன் பணியாக, அதன் இயங்கியல் அரங்கத்தின் துணைப்பொறுப்பாளர் பணியும் அவருக்குத் தரப்பட்டது. ஆனால் இதற்கும் ஊ
ஊதியம்