பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

அப்பாத்துரையம் - 7

திருமதி ஐன்ஸ்டீனிடம் அவர் நாடகத்திட்டத்தைக் கூறியிருக்க வேண்டும். ஏனெனில், அவரும் நேராக அங்கே வந்து காத்திருந்தார். ஐன்ஸ்டீனின் இரவுணவுக்காக அவர் இரண்டு அப்பம் கொண்டு வந்திருந்தார். அளவு குறைந்தாலும் அன்பு குறையாத வண்ணம் அப்பெண்மணி அப்பங்களிரண்டையும் இரு நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார்!

அறிவுலக மன்னர்களின் தொடர்பு

ஐன்ஸ்டீன் ஜூரிச் பேராசிரியராயிருந்த நாட்களில் உலகின் பல அறிவியல் ஆராய்ச்சி மன்னர்களுடன் பழக அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது. பெர்லினிலிருந்து மாக்ஸ் பிளாங்க் (Mox Plarek) என்ற பேரறிஞர் 1905-லேயே அவர் தொடர்புறவுக் கோட்பாட்டின் சிறுதிற விளக்கத்தை ஆதரித்துக் கடிதம் எழுதியிருந்தார். அதுமுதல் ஐன்ஸ்டீனின் ஆராய்ச்சிக் கோட்பாடு முழுவதும் இருவரிடையே நடைபெற்ற கடிதப் போக்குவரவின் ஆய்வு எதிர் ஆய்வு ஆயிற்று. அடுத்த பெரும்பகுதி ஆராய்ச்சி வெளிவருமுன், அவர்களிடையே அது நன்றாக அலசிச் செப்பம் செய்யப்பட்டது.

1907-ல் மாக்ஸ் வான் லோ(Max Van Laue) என்ற பெர்லினிலுள்ள மற்றோர் அறிஞர் தொடர்பு ஏற்பட்டது.

1908-ல் ஸால்ஸ்பர்க்கில் அறிவியலறிஞர் பேரவை (Nlongrass of sccentisns at Salzberg)ஒன்று கூடிற்று. அதில் தொடர்புறவுக் கோட்பாடு பற்றிப் பேசும்படி ஐன்ஸ்டீன் அழைக்கப் பட்டிருந்தார், இங்கே அவர் சொற்பொழி வைக் கேட்டவர்கள் மாணவர்களோ, ஆராய்ச்சி இளைஞர்களோ அல்லர். உலகின் அறிவியல் தலைவர்களே அதை நேரிடையாக அவர் வாய் மொழியால் கேட்டு விளக்கம்பெற அவாவினர். அறிஞர் உலகம் முதன்முதலாக அவரை நேரிடையாகக் கண்டு அளவாள வியது இப்போதுதான் என்னலாம்.

ஐன்ஸ்டீன் அறிவியல் உலகில் பெயர்பெறுமுன், அறிவியல் உலகில் அவர் முன்னோடிகளாயிருந்தவர்கள் பிரஞ்சு அறிஞர் ஹென்ரி பரயின்கரர்(Henri Poincaec) என்பவரும் ஹாலந்து நாட்டு அறிஞர் ஹென்ட்ரிக் ஏ.லாரென்சுமே(Hendeik A A Lorensuma) யாவர். ஐன்ஸ்டீன் ஆராய்ச்சிகள் புரட்சிகரமானவை, புத்தூழிக்கு வழி வகுப்பவை என்று இருவரும் மனமார