122
அப்பாத்துரையம் - 7
நிழலாகத் தான் இயங்கிற்று, எனவே ஐன்ஸ்டீன் வருகை இங்கே பலவகையில் முக்கியத்துவம் உடையதாயிருந்தது. அவர் மாணவராக இங்கே பயின்ற நாளிலிருந்து ஐன்ஸ்டீனின் வாழ்வில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. அப் பல்கலைக்கூட வாழ்விலும் எவ்வளவோ மாற்றம் உண்டாகி யிருந்தது. அவர் புகழை அவர் கல்வி கற்ற நிலையம் புத்தம்புதுப் புகழாக்கிற்று.
ஐன்ஸ்டீனின் பணிவு, கூச்சம், ஒதுங்கிய போக்கு, எளிமை ஆகியவை இதுவரை அவர் பேராசிரியர் வாழ்வில் ஒரு குறையாக இருந்ததுண்டு. ஆனால் இப்போது பொங்கி எழுந்த அவர் வண்புகழ் அவர் உண்மை மதிப்பை எடுத்துக்காட்டி அதையும் நிறைவு படுத்திற்று, அவர் எப்போது பேசுவார் என்று மாணவர் திரண்டு காத்துக்கிடக்கலாயினர். அவர் வகுப்பு நேரங்களில் அவர் துறையின் மாணவரே யன்றிப் பிறதுறை மாணவர்கள்கூடப் பெருந்திரளில் வந்து குழுமுவாராயினர். அதேசமயம் அவர் ஆராய்ச்சிக்குரிய எல்லா வாய்ப்புக்களும் உரிமைகளும் அவருக்குக் கிட்டின. அவர் வேலை நேரங்களில் தொலைவில் சென்றிருந்து அவரை ஊக்குவதி லேயே பலர் அக்கறை கொண்டுவிட்டனர்.
அவர் கோட்பாட்டின் பொதுமுறை விளக்கம் இதற்குள் உறுதிவாய்ந்த ஒரு பாரியகட்டடத்தின் சட்ட மாயிற்று. அதன் உத்தரங்கள், கைகள் ஆகியவையே இன்னும் மீந்திருந்தன. இவையும் முற்றுப்பெற ஜூரிச் வாழ்வே பெரிதும் உதவியாயிருந்தது. முன் அவர் நண்பராக இருந்த மார்ஸெல் கிராஸ்மென் இப்போது அங்கே கணக்குத் துறையாளராயிருந்தனர். ஐன்ஸ்டீன் கோட்பாட்டை வகுத்து உருவாக்குவதில் அவர் ஐன்ஸ்டீனுடன் ஒத்துழைத்தார்.
உலக அறிவியற் பேரவைகள்
1911-ம் ஆண்டு வால்ட்டர் ஏர்ன்ஸ்ட் என்ற இயைபியல் ஆராய்ச்சி(Ualtes Ernst Envaetigitor in Chemistry) அறிஞர் முயற்சியால் பெல்ஜிய நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில்34 உலக அறிவியலாளர் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. பெருஞ் செல்வ வணிகரான ஸால்வே35 என்பவர் செலவில் அது நடைபெற்றதனால், அது ஸால்வேப் பேரவை என்று அழைக்கப்