பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

அப்பாத்துரையம் - 7

பதவியையும் செல்வத்தையும் வளர்த்துக் கொள்ள முனைந்தனர். யைபியலறிஞர் வால்ட்டர் நேர்ன்ஸ்ட் (Walter Nernst) நச்சுவளி(poisarras) சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டார். ஜெர்மனிக்கு நச்சுவெளி செய்வதற்கு வேண்டிய அம்மோனியா அயல் நாடுகளிலிருந்து கிடைக்கவில்லை.பிரிட்ஸ் ஹேபர் என்ற மற்றோர் அறிஞர் வளி மண்டலத்திலிருந்தே அதைப் பிரித்தெடுக்கும் ஒரு வகைதுறை கண்டு போர் முயற்சியை ஊக்கினார். இந்த அறிஞர்களுக்கு மாறாக, ஐன்ஸ்டீன் போரை வெறுத்தார்.போரில் ஜெர்மனியின் போக்கை அவரால் மனமார ஆதரிக்க முடியவில்லை.

அரசியல் அரங்கத்தில் நடந்த போரை போரை ஒட்டி, அறிவியலரங்கத்திலும் ஒரு போர் தொடங்கிற்று. ஜெர்மானி யரல்லாத அறிவியலறிஞரைப் புறக்கணிக்கும் மனப்பான்மை வளர்ந்தது. ஐன்ஸ்டீன் இதிலும் பங்கு கொள்ள முடியவில்லை.

ஜெர்மனியின் கலைத்துறை, அறிவுத்துறைப் புகழை அதன் போர் முயற்சிக்கெதிராக்க நேசநாட்டினர் முயன்றனர். அறிவுத்துறை ஜெர்மனி வேறு, ஆதிக்க ஜெர்மனி வேறு என்று அவர்கள் விளம்பரப்படுத்தினர். இதனை எதிர்த்து, 92 தலைசிறந்த அறிஞர்கள் போர் முயற்சியில் தாம் ஈடு பட்டுள்ளதாக அறிக்கையிட்டனர். இதிலும் ஐன்ஸ்டீன் கையொப்பமிடவில்லை.

போர்க்கால முழுவதும் ஐன்ஸ்டீன் தம் ஆராய்ச்சியுலகிலேயே அடைபட்டுக்கிடந்தார். நாட்டுக்கு நாடு தூற்றிக் கொண்டது. அவர் பெயரும் அவர் கோட்பாடுகளும் கூட இடையிடையே இழுக்கப்பட்டன. ஆனால், அவர் எதற்கும் செவிசாய்க்கவில்லை.

புதிய அன்புச் சூழல்

அவர் உள்ளம் இப்போது போரின் அவதிபற்றியும், உலகத்தின் அல்லல்கள் பற்றியும் கவலைப்பட்டது. அவர் உடலும் பெரிதும் நலிவுற்றது. இச்சமயம் அவர் மாமனும் மைத்துனியும் அவருக்குப் பேராறுதலும் பெருந் துணையும் அளித்தனர். போர்க்கால உணவு நெருக்கடி நிலைமையில் குடும்ப வாழ்வற்ற நிலையில் அவர் விடுதிஉணவையே நம்பியிருக்கவேண்டும்.