128
அப்பாத்துரையம் - 7
அவற்றைக் கொஞ்சிப்பேசும் செல்லப்பெயர்களாக்குவது வழக்கம். அங்ஙனம் பேசிப் பழைய எலிசாவின் குழந்தையுரிமை இப்போது நட்புரிமையாக நீடித்தது. நட்புரிமை விரைவில் அவர்கள் இருவர் வாழ்வையும் ஒன்று படுத்திற்று. போர்க் காலத்திலேயே ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் எலிசா ஐன்ஸ்டீனை மணந்துகொண்டார்.
முன்பே ஒரே குடிப்பெயர் தாங்கிய அவ்விருவரும் திருமணத் தால் மிகுதி பெயர் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட வில்லை. எலிசாவின் பிறந்த குடிப் பெயரே வேட்டகக் குடிப் பெயராகவும் அமைந்தது.
தொடர்புறவுக்கோட்பாட்டின் பொதுமுறை விளக்கம் பெர்லினி லேயே 1914-இல் முழு உருவடைந்தது. அத்துடன் ஒளிக்கதிரின் ஈர்ப்பாற்றல்பற்றி 1911-இல் பிரேகில் அவர் செய்த முடிவைப் பின்னும் திருத்தி, 1916-இல் இரண்டாவது ஓர் அறிவிப்பு வெளியிட்டார். முதல் அறிவிப்பு கதிரவன் கோள்மறைவை ஒட்டித் தேர்வுபெற இருந்த சமயம், போர் தொடங்கியதால் அந்தத் தேர்வு தடைப்பட்டுவிட்டது. 1918-ல் போர் முடிவுக்குவந்து அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. அடுத்த ஆண்டிலேயே முழுக் கோள் மறைவு உண்டாயிற்று.
ங்கிலாந்திலுள்ள 'மன்னுரிமைக் கழகம்," "லண்டன் மன்னுரிமை வானூலாராய்ச்சிக் கழகம்’7 ஆகிய இருகழகங்களின் ஒன்றுபட்ட முயற்சியால், பிரேக் முடிவு, பெர்லின் முடிவு ஆகிய இரண்டும் தேரப்பட்டன.
பிரேஸிலிலும் மேற்கு ஆபிரிக்காவிலுமே கதிரவன் முழு மறைவு தென்பட்டன.இரண்டுவானூற் குழுக்கள் இரண்டிடத்திலும் கதிரவனைப் படம்பிடித்தன. ஐன்ஸ்டீனின் பெர்லின் முடிவே கிட்டத்தட்டச் சரி எனத் தெரிய வந்தது.
இதுவரை கொள்கையளவிலேயே வெற்றிபெற்றிருந்த தொடர்புறவுக் கோட்பாடு, இப்போது நேரான காட்சித்தேர்வு முறையாலும் வலியுறவு பெற்றுவிட்டது.
பகைமை எதிர்பகைமைச் சூழல்கள்
போர்க்காலத்திலிருந்த நாட்டுப் பகைமைகள் போர் முடிந்த வுடன் ஓய்ந்து விடவில்லை. நேர்மாறாக வெற்றி இதை ஒருதலைச்