பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

129

சார்பாக வலியுறுத்திற்று. தோல்வியுற்ற ஜெர்மனியில் குமுறல்கள் மட்டுமே இருந்தன. வெற்றி பெற்றவர்கள் பக்கமோ விளம்பர வெற்றிகளில் முனைந்து ஜெர்மனியின் தவறுகளைப் பெருக்கும் போக்கு எழுந்தது. இச்சமயத்தில் ஐன்ஸ்டீன் முடிவுகளைத் தேர்வு செய்ய, வெற்றிபெற்ற இங்கிலாந்தின் சார்பிலே, இரண்டு மன்னுரிமைக் கழகங்கள் முனைந்ததுபற்றி ஆங்கில நாட்டுப் பத்திரிகைகள் முதலில் வியப்புத்தெரிவித்துக்கிண்டலாக எழுதின. ஆயினும் விரைவில் ஐன்ஸ்டீனின் வெற்றி நேச நாடுகளிலும் அவர் செல்வாக்கை வளர்த்தது.

ஐன்ஸ்டீன் இதுவரை அறிவியல் உலகிலேயே ஆதரவுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகியிருந்தார். இப்போது அரசியல், சமய, இன, கட்சி மனப்பான்மைகளை முன்னிட்டுப் பொது மக்களிடையே அவரைப் போற்றிப் புகழ்பவரும், தூற்றி இகழ்பவரும் பெருகினர். ஐன்ஸ்டீன் பெயர் சாதகமாகவோ, பாதகமாகவோ உலகமெங்கும் பத்திரிகைகளில், துண்டு வெளியீடுகளில், அறிஞர் கழகங்களில் அடிபட்டது.

யூத எதிர்ப்பு; யூத இயக்கம்

போற்றுதலையும் சரி, தூற்றுதலையும் சரி, ஐன்ஸ்டீன் பொருட்படுத்தவில்லை. அவர் ஆராய்ச்சிகளிலேயே கண்ணும்

கருத்துமாயிருந்தார்.

ஆனால், அவரால் பொதுவாழ்விலிருந்து ஒதுங்கியிருக்க முடியவில்லை.

முற்றிலும்

தோற்றுவிட்ட ஜெர்மனியில் எங்கும் மனக்கசப்பும் கருத்துக் குழப்பங்களும் மலிந்திருந்தன. அதனிடையே

தோல்விகளுக்கு முழுவதும் யூதரையே குறைகூறும்

மனப்பான்மை வளர்ந்துவந்தது. யூதர்கள் இதைப் பார்த்துக் கொண்டு வாளா இருக்கமுடியவில்லை. போர் முடிவில் துருக்கிப் பேரரசிலிருந்து பாலஸ்தீனம் பிரிந்து தனி நாடாகியிருந்தது. அது யூதர்களின் பண்டைத் தாயகம். -த் தாயகம். இஸ்லாமியர் ஆட்சிகளின் பயனாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யூதர் தாயகமற்று உலகத்தில் பரந்து குடியேறி மீளும் வாய்ப்புக் கிடைத்தது. ஆகவே, அவர்களும் யூத உலகமாக ஒன்றுபடத் தொடங்கினர்.

ஐன்ஸ்டீன் யூத வெறியர் அல்லராயினும், யூதர் பக்கம் ஒத்துணர்வு காட்டினார். முதல் யூதர் மாநாட்டிலே அவர் பங்கு