பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

131

உதிரிகளுக்கு மகிழ்வூட்டியது. எனவே, 1924-ல் அவர் மீண்டும் சங்கத்தின் குழுவில் சேரவேண்டிவந்தது.

போரின் புயல்களாலும் போருக்குப்பின் ஏற்பட்டபுயல் எதிர்ப்புயல்களாலும் ஐன்ஸ்டீன் அகவாழ்வு அலைக் கழிக்கப்பட்டது. அவ்வகநிலைப் புயல்களில் அவருக்கிருந்த ஒரே ஆறுதல் அவர் ஆராய்ச்சிகளின் வெற்றிகரமான முற்போக்கும், அன்பாதரவு காட்டி அவர் வாழ்வின் இன்பதுன்பங்களில் பங்குகொண்ட அவர் மனைவி எலிசா ஐன்ஸ்டீனின் துணையுமேயாகும்.

புதிய கருத்துப்புரட்சிகள்

ஒளிக்கதிர் ஈர்ப்பாற்றல்களால் வளைவுறுகின்றது என்ற ஐன்ஸ்டீனின் 1911,1916-ஆம் ஆண்டைய முடிவு மற்றொரு பாரிய இருதலைப்பட்ட கருத்துப் புரட்சிக்கு அடி கோலிற்று. ஈர்ப்பாற்றல் பொருளின் கவர்ச்சியாற்றலன்று. அதன் இயக்கத்தின் விளைவாக ஏற்படும் சூழ்கள ஆற்றலே" என்று அவர் கண்டார். இது ஒருபுறம் மின் காந்த இயக்கத்தின் சூழ்கள ஆராய்ச்சியுடன்" அவர் ஆராய்ச்சி யைப் பிணைத்தது. மற்றொரு புறம் ஒளி ஒவ்வொரு சூழ்கள மண்டலத்திலும் வளைந்து செல்வதால், அதன் மொத்தப் போக்கும் வளைவானதே என்று அவர் எண்ணத் தொடங்கினார். இது அவரை யூக்லிடின் டக்கணக்கியலை விட்டு, பாரிய அளவை களில் ரைமன் டக்கணக்கியல்13 முறைகளைப் பின்பற்றச்செய்தது.

ஐன்ஸ்டீன் புகழ் அறிவுலகில் உச்சநிலை அடைந்த பின்னும் உலகப் பொதுமக்களிடையே அவர் கருத்துக்கள் எளிதில் பரவாமலே இருந்தன. இதற்கு அவர் கருத்துக்களின் எதிர்பாராப் புதுமையும் கடுமையும் ஓரளவு காரணமாயினும், இரண்டு உலகப்போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசியல் சமுதாயச் சூழல்களும் அவற்றின் இயக்க எதிர் இயக்க அலைகளுமே பெரிதும் காரணமாய் இருந்தன. ஆயினும் இவ்வியக்க எதிர் இயக்க அலைகளால் ஒரு நல்ல பயனும் ஏற்பட்டது.ஐன்ஸ்டீன் கருத்துக்களை அவர் வாய்மொழிகளாலே அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் அறிவியல் உலகில் எங்கும் எழுந்தது.