பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

அப்பாத்துரையம் - 7

உலகின் நாடுகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் ஆகியயாவும் ஒன்றன்பின் ஒன்றாக, அவரை அழைத்து, அவர் கருத்துக்களை அறிந்து, அவர் பெருமையை முன்னிலும் பன்மடங்காகப் பாராட்டின. புயல் எதிர் புயல்களிடையே அவர் பேரும் புகழும் பின்னும் வளர்ந்தன.

மீண்டும் ஜெர்மன் குடியுரிமை

ஜெர்மனியில் அவர்மீது ஏற்பட்டுவரும் எதிர்ப்புக் கண்டு ஜெர்மன் அரசியலார் வருந்தினர்.ஜெர்மனியுடன் அவர் தொடர்பு நீடிக்க வேண்டு மென்று அவர்கள் வற்புறுத்தினர். ஐன்ஸ்டீன் உள்ளம் இந்த அன்புக் கோரிக்கைக்குக் கனிவுடன் இணங்கிற்று. இதுவரை ஸ்விட்ஸர்லாந்துக் குடியுரிமையுடனே வாழ்ந்த அவர், இப்போது ஜெர்மன் குடியுரிமை கோரிப் பெற்றார். ஸ்விட்ஸர்லாந்துக் குடி உரிமை துறக்கப்பட்டது. இச்செயலுக்கு ஐன்ஸ்டீன் பின்னால் வருந்த நேர்ந்தது.

வெளிநாட்டுப் பயணம்: ஹாலந்து, பிரேக்

ஹாலந்தில் லெய்டன் பல்கலைக்கழகத்தில் 1912 முதலே ஐன்ஸ்டீன் அங்கம் வகித்துவந்தார். ஆண்டு தோறும் 1928 வரை அவர் மாணவர்களுக்குக் காலாகாலத்தில் தம் பேருரைகளால் பயிற்சி அளித்து வந்தார்.

1921-இல் புதிய ஜெக்கோஸ்லவேகியா ஆட்சியில் இருந்த பிரேக் பல்கலைக் கழகத்துக்கு அவர் சென்றார். இங்கே அவர் தம் நண்பர் பேராசிரியர் பிராங்குடன் தங்கி அளவளாவினார்.

சமையல், தொழிலில் அறிவியல் அறிவின் துணை

பேராசிரியர் பிராங்க் அப்போது புதிய மணவாழ்வில் ஈடுபட்டிருந்தார். மனைவி கல்லூரி மாணவராய் இருந்தவர். அவர் களுக்குக் குடிக்கூலிக்கு வீடு கிடைக்காததால், பல்கலைக்கழக ஆய்வுகூடத்தின் ஓர் அறையிலேயே அவர்கள் தங்கியிருந்தனர்.

சமையல் அனுபவமற்ற நங்கை அன்று வாங்கிய ஈரலைக் கொதிநீரில் விட்டுக் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தார்.ஈரல் எளிதில் வேகவில்லை. பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்த