பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

(137

கூடத்திலிருந்த25 நியூட்டனின் கல்லறைமீது ஐன்ஸ்டீன் மாலை யிட்டார். அச்சமயம் ஹால்டேன் பெருமகனார் இரு பேரறிஞர்களையும் ஒப்பிட்டுப் பேசினார். “18-ஆம்

நூற்றாண்டுக்கு நியூட்டன் எவ்வாறு அறிவியல் மன்னரோ, அவ்வாறே 20-ஆம் நூற்றாண்டுக்கு ஐன்ஸ்டீன் அறிவியல் மன்னரா வார்' என்ற அவர் உரை சமயத்திற்கேற்ற நல்லுரையாய் அமைந்தது.

26

ஹால்டேன் இல்லத்தில் போர்க்கால முதலமைச்சர் லாயிட் ஜார்ஜ், கலை மன்னர் பெர்னார்டுஷா," கணக்கியலறிஞர் ஒயிட் ஹெட்,28 இங்கிலாந்தின் கோவிலக முதல்வர்” ஆகியவர்களுடன் ஐன்ஸ்டீன் அளவளாவினார்.

கோவிலக முதல்வர் கவலை

தொடர்புறவுக் கோட்பாட்டுக்கும் சமயத்துக்கும் தொடர் புறவு உண்டென்று யாரோ கோவிலக முதல்வரிடம் கூறியிருந்தார். அவர் ஐன்ஸ்டீன் நூல்களைப் படித்துப் படித்துப் பார்த்தும் அதன் சமயத்துறைப் பொருள் விளங்காமல் குழப்பமடைந்திருந்தார். அது சமயத்துக்கு மாறானதென்று வேறுசிலர் சொல்லவே, அவர் குழப்பம் இன்னும் மிகுதியாயிற்று. இருதரப்புக் கருத்துரையையும் அவர் ஐன்ஸ்டீனிடம் கூறி

விளக்கம் கேட்டார்.

ஐன்ஸ்டீன் விடை வாதங்களுக்கே இடமில்லாமல் செய்தது. "தொடர்புறவுக் கோட்பாட்டால் சமய உணர்வு எவ்வாறு பாதிக்கப்படும்?" என்ற கேள்வியிலிருந்த கவலை தோய்ந்த தொனி அவரைச் சிரிக்க வைத்தது. "ஐயன்மீர், தொடர்புறவுக் கோட்பாடு சமயத்தை எவ்வகையிலும் பாதிக்காது. அது அறிவியல் சார்ந்தது. சமயம் சார்ந்த தன்று, என்று அவர் கூறினார்.

ஐன்ஸ்டீன் கட்டுரைப் போட்டி

ஐன்ஸ்டீன் ஜெர்மனி வருமுன் வெளிநாடுகளில் அவருக்கு அளிக்கப் பட்ட வரவேற்பின் புகழ் அங்கே சென்று புயல் வீசிற்று. அதன் அலை எதிர் அலைகள் ஐரோப்பாவெங்கும் பரவின. அதன் பயனாக இரு நிகழ்ச்சிகள் ஏற்பட்டன. அவற்றுள் ஒன்று