அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
நோபல் பரிசு
139
முதல் இடையூறு பரிசுத் திட்டத்தின் வாசகம் பற்றியது. நோபல் பரிசு ஆண்டுதோறும் அணிமையில் கண்டுணரப்பட்ட பயனுடைய கண்டு பிடிப்புக்கே கொடுக்கப்படவேண்டும். தொடர் புறவுக் கோட்பாடு கண்டு பிடிப்புக்களுக்கு உதவும் ஒரு அறிவுக் கோட்பாடு. கண்டு பிடிப்பு என்ற சொல்லின் சட்டவரம்புக்குள் அது வரக்கூடுமா என்று அவர்கள் தயங்கினர்.
இருபது ஆண்டுகளுக்குப்பின் அது அணுகுண்டைக் கண்டு பிடிக்க உதவிற்று என்பதை அவர்கள் அன்று அறிந்திருக்க முடியாது.
மற்றொரு இடைஞ்சல் கோட்பாட்டின் ஆதரவு எதிர்ப்பு இயக்கங்களாக உலகம் பிளவுபட்டிருந்த அன்றைய சூழ்நிலையே!
நிலைமையைச் சமாளிக்கப் பரிசுக்குழுவினர் ஒரு வழி கண்டனர்.தொடர்புறவுக் கோட்பாட்டை ஒதுக்கிவைத்து விட்டு, ஒளி மின் ஆற்றல் துறையிலும், ஒளி இயைபியல் துறையிலும் அவர் கண்டுணர்ந்த கண்டு பிடிப்புக்களின் பெயரால் 1922-ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு அளித்தனர்.
பரிசளிப்புச் சமயம் ஐன்ஸ்டீன் மீட்டும் தொலை நாடுகளுக்குப் புறப்பட்டிருந்தார். ஆயினும் முதற்பயணமாக1923 ஆம் ஆண்டு தொடக்கத்தில்ஸ்வீடன்சென்று, கோடபர்க் நகரில்32 ஸ்வீடன் அறிவியல்கழகத்தில் ஸ்வீடன் அரசர் முன்னிலையில் பேசினார். அவர் பேசியது பரிசுக்குரிய கண்டுபிடிப்புப் பற்றியன்று, தொடர் புறவுக் கோட்பாடு பற்றியேயாகும்.
ஐன்ஸ்டீன் எதிரிகளின் ஆற்றல் இதற்குள் ஜெர்மனியில் வளர்ந்து வந்தது. அவர்கள் நோபல் பரிசுக்குழுவின் செயலின் முரண்பாட்டை எடுத்துக்காட்டியே எதிர்ப்புச்செய்தனர். யூத எதிர்ப்பு அந்த ஆண்டிலிருந்து வர வரப் பெருகிற்று. 1922-இல் அது அயல்நாட் டமைச்சராயிருந்த யூதத்தலைவர் வால்ட்டர் ராட்டினோவின்33 கொலை உருவில் தலை தூக்கிற்று.
ஐன்ஸ்டீன் இந்நிகழ்ச்சி கேட்டுத் திடுக்கிட்டார். ஜெர்மனியில் வரவிருக்கும் வரவிருக்கும் கொடுங்கோலாட்சி அவர் எதிர்பாராத ஒன்றடன்று. ஆயினும் எதிர்பார்த்ததைவிட அது விரைந்து அணுகிவந்தது. இந் நிலையிலும் அவர் தம் சுற்றப்பயணத்தை நிறுத்தவில்லை.