அப்பாத்துரையம் - 7
142 || தாமே முன்னின்று அவரைப் பெருமைப்படுத்தினார். ஆங்கில மொழியை விட ஐன்ஸ்டீன் பிரஞ்சு மொழியை எளிதாகப் பேசப் பழகியிருந்தார். இதனால் அவர் பிரஞ்சு மக்களுக்கு அவர்கள் தாய்மொழியிலேயே தம் கருத்துக்களை விளக்க முடிந்தது.
ஐன்ஸ்டீன் மீண்டும் ஜெர்மனியின் கலைக்கூடத்தின் கூட் டத்துக்கு வந்திருந்தபோது, அங்கே பிற்போக்காளர் கை வளர்ந்து விட்டதை எளிதாகக் கண்டார். கலைக்கூட உறுப்பினர் பலர் கூட்டத்துக்கு வராதிருந்தனர். பல இருக்கைகள் வெறுமையாகக் கிடந்தன.
ச்
விரைவில் பிற்போக்காளர் கையில் ஜெர்மனியின் அரசியல் சிக்கி விடும் என்பதை ஐன்ஸ்டீன் தெளிவாக உணர்ந்தார். ஆயினும் இச் சூழ்நிலையில் ஜெர்மனியிலிருந்து தாம் செய்யத்தகுவது எதுவும் இல்லை என்பதை அவர் கண்டார். ஆகவே ஸ்வீடனின் அழைப் பையும், தொலை வெளிநாட்டு அழைப்புக்களையும் ஏற்று அவர் பயணமானார்.
கீழைஉலகப் பணம்
இத்தடவை ஐன்ஸ்டீன் சீனா, ஜப்பான், இந்தியா, பாலஸ்தீன் ஆகிய கீழை நாடுகளுக்கெல்லாம் சென்று மக்களுடன் ஊடாடினார். கீழ் நாடுகளிலுள்ள மக்களின் பொறுமை, அமைதி, பணிவிணக்கம் ஆகியவை அவர் உள்ளங்குளிர்வித்தன. மேலைநாடு இழந்துவிட்ட கலை அமைதியை இங்கெல்லாம் கண்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
சீனாவின் ஜெர்மன் பள்ளியிலுள்ள மாணவர்கள் ஜெர்மன் மொழியில் ஜெர்மன் நாட்டுப் பாடல் பாடி அவரை வரவேற்றனர். ஜப்பானில் பேரரசியர் பிரஞ்சு மொழியிலே பேசி அவருடன் அளவளாவினார். ஒவ்வோரிடத்தில் அவர் பேசிய ஜெர்மன் பேச்சும் அதன் மொழி பெயர்ப்புமாகப் பேச்சு நான்கு மணி நேரம் நீடித்தது. இவ்வளவு நீண்ட நேரத்தால் மக்கள் இடைஞ்சலுக் காளாவார்கள் என்று எண்ணி ஐன்ஸ்டீன் சில
டங்களில் குறைந்த நேரம் பேசினார். ஆனால், அவர் அருகிலுள்ள நண்பர்கள் மூலம் நேரம் குறைத்துப் பேசியதற்கே மக்கள் வருந்தினர் என்று கேள்வியுற்றார். கீழ்நாட்டினர் அன்பார்வமும் அறிவார்வமும் கண்டு அவர் அகமகிழ்வுற்றார்.