அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
யூதர் தாயக வாழ்வு
[143
பங்கு
யூதத்தாயகத்தின் இயக்கத்தில் ஐன்ஸ்டீன் கொண்டவர். ஆயினும் பாலஸ்தீனில் அத்தாயகத்தைக் கண்டபோது ஐன்ஸ்டீ னுக்கு முழுதும் மனநிறைவு ஏற்பட வில்லை. மேனாடுகளில் பிற இனத்தாரிடையே வாழ்ந்ததை விட இங்கே யூதர்கள் அமைதியாகவே வாழ்ந்தார்கள். ஆயினும், அராபியர்களுடன் ஒத்து வாழ்வதில் அவர்கள் போதிய அக்கறை காட்டவில்லை என்று ஐன்ஸ்டீன் கருதினார். யூதர், அராபியர் ஆகிய இரு சார்பினரையும் கீழை நாட்டு மக்களாகக் கருதி, அடக்குமுறை ஆடம்பரம் செய்யும் ஆங்கிலச் செயலாளர்3 ஆட்சிமுறையையும் ஐன்ஸ்டீனும் திருமதி ஐன்ஸ்டீனும் முழுதும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
ஸ்பெயின் செல்கை
1923-இல் ஐன்ஸ்டீன் ஸ்பெயின் நாட்டுக்கு வந்து, அங்கே மன்னர் பதின்மூன்றாம் அல்பான்ஸோவால் வரவேற்கப்பட்டார்.
புத்தம் புதிய ஆராய்ச்சிகள்
1924 முதல் ஐன்ஸ்டீன் மீண்டும்
ஜெர்மனியில்
பெர்லினிலேயே தங்கி, கலைக்கூட வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்.
ஜெர்மனியின் கணக்கியல் அறிவுத்துறைக்குப் பேர் போன பல்கலைக் கழகம் கோட்டிங்கென் பல்கலைக் கழகமே.4 அது மிங்கோவ்ஸ்கியின் கணக்கியல் முறைப்படி நாலளவை முறையில் தொடர்புறவுக்கோட்பாட்டை ஆராயவும், மாணவர்களுக்கு அதைக் கற்பிக்கவும் தொடங்கிற்று. மாக்ஸ் வான் லோ தொடர்புறவுக் கோட்பாட்டைக் கணக்கியல் முறைகளால் விளக்கி ஒரு பாரிய நூல் எழுதினார். தொடர்புறவுக் கோட்பாட்டறிஞர் என்ற புது மதிப்பு அக் கோட்பாட்டின் முதல்வரான ஐன்ஸ்டீன் மதிப்புடன் போட்டுயிடுவதோ என்னும் அளவில் வளர்ந்தது.
ஆனால்,
ஐன்ஸ்டீன் இப்போது புத்தம்புதிய ஆராய்ச்சிகளில் இறங்கித் தம் கோட்பாட்டை விரிவு படுத்திக் கொண்டே வந்தார். ஒன்றுபட்ட சூழ்கள விளக்கம் உண்மையில்