அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
(145
அவர் நெருங்கிய நண்பர்கள் ஓர் அழகிய சிறு உலாப்படகு அனுப்பியிருந்தனர்.
அமெரிக்க யூத இயக்கத்தவர்கள் பாலஸ்தீனத்தினலேயே ஒரு வட்ட வட்டகை நிலம் வாங்கி, அதில் பிறந்தநாள் சின்னங்களாக ஐம்பது மரங்கள் நட்டு வைத்தனர். 'ஐன்ஸ்டீன் சாலை' என்று அது அழைக்கப்பட்டது.
பெர்லின் நகரவை அவர் அடிக்கடி உலாப்பயணம் செய்த ஆற்றோரமாக ஒரு சிறு மாளிகையைப் பரிசளித்தது. ஆனால், சில உரிமைச் சட்டங்களின் பிடியில் சிக்கி இப்பரிசு செயற்படமுடியாது போயிற்று. ஐன்ஸ்டீன் அத்தகைய ஒரு நிலத்தைத் தானே வாங்கி வீடு கட்டிக் கொண்டு வாழ்ந்தார்.
கலிபோர்னியாவின் அழைப்பு
8
அடுத்த ஆண்டு அமெரிக்காவில் பாஸடீனாவில் உள்ள கலிபோர்னியாக் கலைநுணுக்கக் கூடம் அவரை அமெரிக்கா வுக்கு வர வழைத்தது. உலக அமைதி இயக்கத்தில் இச்சமயம் அவர் கருத்தூன்றி- யிருந்தார். அவ்வாண்டுமுதல் அந்நிலையம் ஐன்ஸ்டீனை ஆண்டுதோறும் பேருரை நிகழ்த்தும்படி ஏற்பாடுசெய்து. அவரை 'நேயத் தொடர்புப் பேராசிரியராக ஏற்றது. அதன்படி 1931-லும் அடுத்த ஆண்டிலும் அவர் அங்கே சென்று பேருரையாற்றினார்.
ஹிட்லர் ஆதிக்க முரசம்
9
என்ற
1932 ஆம் ஆண்டில் ஜெர்மன் பொதுத்தேர்தலுக்கு அரசமர பினரான எண்பது வயது சென்ற படைத்தலைவர் ஹின்டன்பர்க் ஒருபுறமும், அடால்ப் ஹிட்லர் ஆதிக்கவெறியர் மறுபுறமும் போட்டியிட்டனர்.ஹின்டன்பர்க்கே வெற்றியடைந்தார். யார் வெற்றிபெற்றாலும் ஜெர்மனியின் ஆதிக்கம் போர்வெறியர் பக்கமே என்பதை ஐன்ஸ்டீன் ஊகித்துக்கொள்ள முடிந்தது.
அவர் எண்ணியபடியே 1933-இல் ஹிண்டன்பர்க் தம் தேர்தல் எதிரியைத் தம்முடன் அரசியலில் சேர்த்துக் கொண்டார்.