பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146

அப்பாத்துரையம் - 7

1932-இல் அமெரிக்காவுக்குப் புறப்படும் சமயம் ஐன்ஸ்டீன் நிலைமைகளை மனைவிக்குக் குறிப்பாகக் காட்டினார்.

66

'இத்தடவை வீட்டைவிட்டுப் புறப்படுமுன் அதை நன்றாகப் பார்த்துக் கொள்," என்றார் அவர்.

“ஏன்?” என்று வியப்புடன் கேட்டார், திருமதி ஐன்ஸ்டீன். "நானோ நீயோ திரும்ப அதைப் பார்க்கப்போவதில்லை,” என்று அவர் உணர்ச்சியின்றி விடையளித்தார்.

அமெரிக்காவின் கல்வித்துறை வல்லுநரான ஆபிரகாம் பிளெக்ஸ்னர்" இப்போது பெர்லின் வந்திருந்தார். புதிதாக நிறுவப்பட்ட பிரின்ஸ்டன் கலைக்கூடத்தில் வந்து தம்முடன் நாட்கழிக்கும் படி அவர் அழைத்தார்.

66

தற்போது நான் கலிபோர்னியாவுக்குச் செல்லும் அழைப்பை ஏற்றிருக்கிறேன். மற்றொரு சமயம் பிரின்ஸ்டன் வருகிறேன்,” என்று ஐன்ஸ்டீன் விடையிறுத்தார்.

நாசிப்புயல் மேகம்

ஹிட்லர் பதவிக்கு வந்ததுமுதல் ஜெர்மனி படிப்படியாகப் பல வகையிலும் மாறுபாடு அடைந்துவந்தது. பிரஷ்ய ஆதிக்கத்திலுள்ள ஜெர்மனிக்கும் ஐன்ஸ்டீனுக்குமே பண்பாட்டு வகையில் பெரும்பிளவு இருந்து வந்தது. ஜெர்மன் குடியுரிமையை அவர் இளமையில் உதறித் தள்ளியதும், ஜூரிச் விட்டுப் பெர்லின் வந்த பின்கூட ஸ்விட்சர்லாந்து உரிமையை விடாததும் இதனாலேயே யாகும். ஆயினும் ஜெர்மனியுடன் பின்னும் அவருக்கு ஒரு தொடர்பு இருந்தது. அறிவியல் துறையில் ஜெர்மனி ஐரோப்பாவில் இன்னும் தலைமைவகித்தே வந்தது. அறிவியல்துறை அரசியலுக்கு உட்பட்ட தன்று. அது அரசியல் கடந்தது என்ற கருத்தே ஜெர்மனியின் கலைக் கோயில்களில் நிலவியிருந்தது. அவர் ஜெர்மன் குடியுரிமையை ஏற்றுத் தாயகத்துடன் சமரச உணர்வு காட்டியதன் காரணம் இதுவே.

ஆனால், போர்க்காலத்திலிருந்தே அரசியலுக்கு முதலிடம் தந்த அறிஞரும் அறிவுத்துறையை ஆட்டிப் படைக்க விரும்பிய அரசியலாரும் பெருகிவந்தனர். ஹிட்லர் வந்தவுடன் அறிவியலின் தனிஉரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாது போயிற்று.