148
அப்பாத்துரையம் - 7
ஐன்ஸ்டீன் பதவிதுறப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமன்று, “பதவித்துறப்பை ஏற்பதில் கலைக்கூடத்துக்குச் சிறிதளவும் வருத்தம் கிடையாது," என்ற வாசகத்துடன் பதவித்துறப்பை ஏற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கையில் அகப்படாத பகைவனைப் பழிக்கும்தொனி அவ் வாசகத்திலிருந்தது. நல்லகாலமாக ஐன்ஸ்டீன் ஜெர்மன் எல்லைக் கப்பால் இருந்தார். இல்லையென்றால், அவர் அறிவும் புகழும் புலி கையில் அகப்பட்ட மானின் அழகுபோலவே அவதிக்குட்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
குற்றச்சாட்டு: வாத எதிர் வாதங்கள்
பதவித்துறப்பை ஏற்ற தீர்மானத்துடனே வேறு பல குற்றச்சாட்டுகளும் ஐன்ஸ்டீன் மீது சுமத்தப்பட்டன. ஜெர்மனியில் பல கொடுமைகள் நடப்பதாக ஐன்ஸ்டீன் பிறநாடுகளில் எங்கும் தூற்றுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
அரசியற் பிடியிலிருந்த கலைக்கூட நண்பர்களுக்கும்
ன்ஸ்டீ னுக்கும் விளக்க எதிர் விளக்கங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஆனால் கலைக்கூடத்தின் குரல் படிப்படியாக நாசியர் குரலாக மாறி வந்தது. ஐன்ஸ்டீன் தாம் குற்றக்கதை கூறியதில்லை என்று மறுத்தெழுதியிருந்தார். அவர்களால் தம் பழைய குற்றச்சாட்டை அப்படியே மெய்ப்பிக்க முடியவில்லை. ஆகவே, அவர்கள் அதைச் சற்றுத் திரித்தனர். குற்றக்கதையை அவராகக் கூறவில்லையானாலும் கூட, பிறர் கூறிய குற்றக்கதைகளை அவர் மறுத்ததில்லை. ஆகவே, அவர் குற்றக்கதை கூறிய இடங்களில் அதற்கு உடந்தையாய் இருந்தார் என்றே கொள்ள வேண்டும். இவ்வாறு குற்றச்சாட்டின் பண்பு மாறிற்று.
வாத எதிர்வாதங்களாலோ, விளக்க எதிர் விளக்கங்களாலோ இனிப் பயனில்லை என்று ஐன்ஸ்டீன் கண்டார். ஏனென்றால், நாட்டுக்காக மெய்யை மறைப்பதே அவர் கொண்ட நாட்டுப் பற்றின் பண்பன்று. முதற் குற்றச்சாட்டு
ய
துவே கடமை என்று சுட்டிக்காட்டிற்று. நாட்டுக்காகப் பொய்கூறத் தயங்கக்கூடாது என்ற புதிய நாஜிக் கோட்பாடாகக் குற்றச் சாட்டு வளர்ந்து வந்தது.