150
அப்பாத்துரையம் - 7
இறுதியில் பிளாங்கின் நெருங்கிய துணைவர் ஹேபர் கூட அகற்றப் பட்டார். அவரைக் காக்க, பிளாங்க் நேரடியாக ஹிட்லரிடமே சென்று வாதாட முயன்றார். ஆனால், ஹிட்லர் தொனியில் வாதவிளக்கத்துக்கு இடமில்லை. அது படைவீரனை நோக்கி ஆணையிடும் படைத்தலைவன் தொனியாய் இருந்தது!
அவர் தோல்வியுற்றார். தோல்வியின் பின்தான் ஐன்ஸ்டீன் முன்னறிவின் திறம் அவருக்கு விளங்கிற்று. ஆனால், விளக்கம் காலங் கடந்ததாயிற்று. வெள்ளம் அதற்குள் அணை கடந்து சென்று விட்ட விட்டது.
பகைமைச் செயல்கள்
ஜெர்மன் அரசியலாரின் பகைமை எண்ணம் படிப்படியாகச் செயற்படத் தொடங்கிற்று.
கலைக்கூடம் தானாக அவரை நீக்கும் தொல்லையை ஐன்ஸ்டீன் பதவிதுறப்பு வேண்டாததாக்கியிருந்தது. ஆயினும் அவர்கள் பதவிதுறப்பை ஒப்புக்கொண்டதுடனும் நிற்கவில்லை. குற்றச்சாட்டுகளுடனும் அமையவில்லை. கலைக்கூட உறுப்பினர் குழுவி லிருந்து அவரை விலக்கிவிட்டதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அந்த விவரத்தையும் அவருக்குக் கடிதமூலம் தெரிவித்தனர். அத்துடன் உருசியநாட்டுப் பொதுவுடைமைக் கட்சியுடன் மறை தொடர்பு வைத்துக்கொண்டிருந்ததாக ஐன்ஸ்டீன் மீது புதிய பழி சுமத்தினர். பொதுவுடைமையாளர் கருவிகலங்கள் அவர் வீட்டில் இருக்கின்றனவா என்று பார்க்கும் சாக்குடன் அவர்கள் அவர் வீட்டைச் சோதனை யிட்டனர்.
சோதனையின் விளைவை எதிர்பாராமலே, அவரைச் அரசியல் நாடுகடத்தி அவர் வீடுவாசல் உடைமைகளையெல்லாம் பறிமுதல் செய்தது!
ஜெர்மன்
முந்திய அரசியலாரின் அன்பு வற்புறுத்தலால், ஐன்ஸ்டீன் தம் பழைய ஸ்விட்ஸர்லாந்துக் குடியுரிமை நீத்து, ஜெர்மன் குடியுரிமை பெற்றிருந்தார். அங்ஙனம் செய்யாதிருந்திருந்தால் அவர் உடைமைகள் இப்படிப் பறிமுதல் செய்யப்படமுடியாது. அதுபோலவே, பெர்லின் நகரசபை பரிசளிக்க முன்வந்தபோது அச்செயலை நிறைவேற்ற அவர் தம் பணத்தைச் செலவு செய்து