154
பிரின்ஸ்டன் அழைப்பு
அகதியான அறிஞர்களிடையே
அப்பாத்துரையம் - 7
ஐன்ஸ்டீனுக்குத்
தனிப்பட்ட முறையில் தம்மைப்பற்றி மிகுதி கவலையில்லை. அவரை விரும்பி அழைத்து அவரை வரவேற்கத் தவங்கிடந்த உலகப் பல்கலைக்கழகங்கள் எண்ணிறந்தன. பாலஸ்தீனிலுள்ள செரூசலம் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, ஸ்பெயினிலுள்ள மாட்ரிட் பல்கலைக்கழகம், பிரான்சிலுள்ள ஸார்போன் பல்கலைக்கழகம் முதலியவை அவர் இணக்கம் பெறாமலே அவரைப் பேராசிரியராக அமர்த்திவிடத் துணிந்தன. ஆனால், ஐன்ஸ்டீன் எதிர்கால நோக்கு ஐரோப்பாவை ஜெர்மனியின் ஒரு அகலப் பதிப்பென்றே கொண்டது.
இரண்டாவது உலகப்போர் வரலாற்றில் 1942-ஆம் ஆண்டு நிலவரத்தை எண்ணிப்பார்ப்பவர் ஐன்ஸ்டீனின் எதிர்கால நோக்கு வியக்கத்தக்க முறையில் அன்று மெய்ப்பிக்கப்பட்டது காண்பர். ஏனெனில் அன்று பிரிட்டன் நீங்கலாக மீந்த ஐரோப்பா முழுவதும் ஹிட்லரின் ஒரே பாரிய இரும்புக்கோட்டையாக இருந்தது. பிரிட் டன்கூட அந்நாளில் நாஜியர் போர்ப்பயிற்சிக் களமாக அமைந்தது. நாஜியரால் அலைக்கழிக்கப்படாமல் அன்று மீந்து இருந்த மேலை உலகப்பகுதி, ஐன்ஸ்டீன் உற்ற தாயகமாகத் தேர்ந்தெடுத்த அமெரிக்கா ஒன்றே.
ஐன்ஸ்டீனை அமெரிக்காவுக்கு விருந்தினர் என்ற முறையி லேயே தொடர்ந்து அழைத்த நிலையம் பாஸடீனாவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகமே. ஆனால், இதுவே அமெரிக் காவில் அவர் பிற்கால வாழ்வுக்கு நிலையான அடிப்படையாயிற்று. 1932-லேயே அவர் புத்தம் புதிதாக அமெரிக்காவில் ஏற்பட இருந்த பிரின்ஸ்டன் உயர்தர ஆராய்ச்சிக் கூடத்தில் உழைப்பதாக ஏற்றுக் கொண்டுவிட்டார். இந்நிலையத்தில் அவர் 1933-லேயே சென்று சேர்ந்தார்.
பெர்லின் கலைக்கூடமும் பிரின்ஸ்டன் ஆராய்ச்சிக் கூடமும்
பிரின்ஸ்டன் உயர்தர ஆராய்ச்சிக்கூடம் பலவகைகளில் பெர்லினிலுள்ள பிரஷ்யக் கலைக்கூடத்தை முன் மாதிரியாகக் கொண்டு அமெரிக்காவில் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு