பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 7

162

அதற்கப்பாலுள்ள வெட்ட வெளி எல்லையின் ஒளியலையன்றி வேறெதுவும் செல்வதில்லை.

7

5

நம் கண்காணும் ஒளி வெண் கதிரொளி மட்டுமே;. இதில் கதிரவனொளியின் ஏழு நிறங்களும் அடங்கியுள்ளன. அந்நிறங்கள் வயலட், இன்டிசோ, பச்சை, நீலம், மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகியவை. இவற்றுள் மிக அகலங் குறைந்த அலை வயலட் அலையே. அது ஒரு சென்டி மீட்டரில் இலட்சத்தில் நான்கு கூறு நீளமுடையது. மிக அகலமிக்கது சிவப்பலை. அது அதே இலட்சத்தில் ஏழு கூறு நீளமுடையது. இவற்றிடைப்பட்ட சிறு அகலத்துக்கு இப்பாலும் அப்பாலும் (விளக்கப் படம் 1 காண்க; பக்கம்: 95) எத்தனையோ நிற அலைகளும், ஒளி, வானொலி, ஒலிபரப்பு' அலைகளும் ஓயாது இயங்குகின்றன.

8

இவை அனைத்தும் கண்காண அலைகள்,ஆராய்ச்சியறிஞர் அவற்றின் செயலால் அவற்றைக் கண்டுபிடித்து நமக்குப் பயன் படுத்துகிறார்கள். புலன் காணாத இவற்றைப் புலன் கடந்த ஆராய்ச்சி அறிஞர்கள் இயற்கையின் மறைவான உள் வீட்டிலிருந்து நமக்கு எடுத்துதவியுள்ளனர்.

விசும்பின் கருத்தாட்சி

கண்காணும் நம் ஒளியலைகளுக்கும், கண் காணாத இந்த அலைகளுக்கும் உள்ள வேறுபாடு அவற்றின் அளவில், அவற்றின் அலையகல ஏற்றத்தாழ்விலேயே உள்ளது. மருத்துவ நிலையத்தில் உடலின் உட்பகுதியைப் படம் பிடிக்க உதவுபவை 'எக்ஸ்' கதிர்கள்.° இவ் அலைகள் ஒளி அலையைக் காட்டிலும் மிக நுட்பம் வாய்ந் தவை. சென்டி மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு கூறுமுதல் பத்துக்கோடியில் ஒரு கூறு வரையில் இவை குறுகிச் செல்கின்றன. அதே சமயம் வானொலியின் அலைகள் ஒரு லட்சம் சென்டி மீட்டர் முதல் ஒரு கோடி சென்டி மீட்டர் வரை அகலமுடையனவாக விரிந்து பரவுகின்றன.

நீரின் அலைகள் நீரில் தவழ்கின்றன. ஒலி அலைகள் காற்றில் தவழ்கின்றன. ஆனால் ஒளி அலைகளும், அதனுடனொத்த பிற கண்காணா அலைகளும் வெற்றிடத்தில் எவ்வாறு இயங்க முடியும்? இக்கேள்வி அறிவுலகின் ஒரு புதிராயிற்று. புதிருக்கு அறிஞர் ஒரு தற்காலிக விளக்கம் கண்டனர். வெளியிடத்தில்