164
அப்பாத்துரையம் - 7
எப்பொருளும் தன்னூடாகச் செல்ல வழிவிடவேண்டும்! எப்பொருளின் உள்ளீடாகவும் இருக்க வேண்டும்! இதுவே மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சியின் பின் ஏற்பட்ட விசித்திர முடிவு!
அணுவினும் சிறியன், அண்டத்தினும் பெரியன்! காற்றினும் நொய்மையன், வைரத்தினும் திண்ணியன்! இவ்வாறு எதிரெதிர் பண்புகளைக் கடவுள் பண்பாகக் கருதினர் சமயவாணர். விசும்பு வகையில் அறிஞரும் இதே வகையான முடிவுக்கு வரவேண்டிய வராயினர்! இது அவர்களுக்குத் திகைப்பை
உண்டுபண்ணியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.
மைக்கேல்சன் மார்லி லாரன்ஸ் தேர்வாராய்ச்சிகள்
ஓடும் கப்பலில் பந்தாடுபவர், மிதிவண்டி விடுபவர் ஆகியவர் களுக்குக் கப்பல் வேகம் மாறாதபோது எந்த இடர்ப்பாடும் கிடையாது. நிலையான இடத்தில் பந்து விழுவதுபோலவே அங்கும் விழுகிறது. இதற்குக் காரணம் கப்பலுடன் அதன்மேலுள்ள காற்று வெளியும் உடன் செல்கிறது என்பதே. விழும் பொருள்கள் கப்பலின் வேகத்தையும் ஏற்றே விழுகின்றன. இயங்கும் பொருள்களும் அப்படியே! நிலவுலகம் விசும்பூடு செல்லும்போதும் இதே நிலைதான் ஏற்படவேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டு மைக்கேல்சனும் மார்லியும் அடுத்த ஆராய்ச்சி நிகழ்த்தினார்கள்.
அவர்கள் ஒரு நுண்ணிய ஆய்களத்தேர்வை வகுத்தார்கள். அது இடையீட்டளவை” என்னும் பெயர் கொண்டது. ஒரு சுழல் மேடையில் ஒரு கறைப்பளிங்குக் கண்ணாடி சாய்வாக வைக்கப் பட்டது. அது பாதி ஒளியை ஊடுருவவிட்டு மறு பாதி ஒளி யை எதிரளித்தது. இக் கண்ணாடியினூடாக ஒரு புறமிருந்து ஓர் ஒளிக்கதிர் கண்ணாடியில் செலுத்தப்பட்டது. கதிரொளியின் ஒரு பகுதி கண்ணாடிக்கு நேரே எதிரிலிருந்த ஒரு முகக் கண்ணாடி விழுந்து, எதிரளிக்கப்பட்டு, சாய் கண்ணாடி மூலம் ஒரு நுண்ணாடியில் வந்து சேர்ந்தது. மற்றொரு பகுதி மேடையின் குறுக்கே இருந்த மற்றொரு முகக்கண்ணாடியில் விழுந்து, பின் துபோலவே எதிரளிக்கப் பட்டு, அதே நுண்ணாடிக்கு வந்தது. (விளக்கப்படம் 2 காண்க; பக்கம்: 114).
மீது