170)
அப்பாத்துரையம் - 7
அவரைத் தள்ளிவிடுகிறது. வண்டி நேராகச் செல்வதற்கு மாறாகச் சுழன்று செல்லுமேயானால், உடலின் இயக்கம் ஒடும் ஒட்டத்திற்கு எதிரானதாகவே இருக்கும். ஈர்ப்பாற்றலும் நில ஈர்ப்பாற்றலும் இவையே என ஐன்ஸ்டீன் கணித்துக் காட்டினார்.
ஞாயிற்று மண்டலம் பற்றிய புதிரின் விளக்கம்
ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் பலருக்கு மாயம்போலவும், பலருக்குக் கவிஞர் கற்பனை போலவும் மருட்சி அளித்ததுண்டு. இதனால் தொடக்கக் காலத்தில் அவை மெய்ம்மை விளக்கங்களா, கற்பனைகளா என்று சிலர் மயங்கினர். ஆனால், ஒளிக்கதிர்களின் வளைவுபோன்ற பல மெய்ம்மைகள் காட்சியாராய்ச்சிகளாலும், ஆய்வுகள் ஆராய்ச்சி களாலும் மெய்ப்பிக்கப் பட்டன. அத்துடன், உலகை ஆட்டிப்படைத்துள்ள அணுக்குண்டு, பொருள் - ஆற்றல் மாறுபாடு பற்றிய அவர் வாய்பாட்டின் விளைவேயாகும். தவிர, ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் அறிவியல் உலகின் பல புதிர்களையே விளக்கிப் புத்தொளி தந்துள்ளன.
பொருள் - ஆற்றல் மாறுபாட்டு வாய்பாட்டால் விளக்கம் பெற்ற மற்றொரு புதிர், ஞாயிற்று மண்டல ஆராய்ச்சித்துறை பற்றியதாகும்.ஞாயிற்று மண்டலத்திலிருந்து நிலவுலகுக்கு வரும் ஒளியாற்றலின் அளவே எல்லையற்றது. ஆனால், அண்ட வெளியில் பரவும் ஒளியாற்றலில் இது ஒரு சிறு பகுதியேயாகும். எல்லையற்ற காலம் இவ்வாறு எரிந்து ஒளியாற்றல் இழந்தும், ஞாயிற்று மண்ட லத்தின் எடைமானத்திலோ, பருமானத்திலோ அதற்கேற்ற குறைபாடு காணப்படவில்லை. இது அறிவியல் அறிஞர்களுக்கு விளங்காத புதிர்களுள் ஒன்றாக இருந்தது.
பொருள் ஆற்றல்தொடர்பு பற்றிய ஐன்ஸ்டீன் வாய்பாடு இதை முற்றிலும் விளக்கிற்று. பொருள் ஆற்றலாக மாறும்போது, பருமானத்தின் அளவைவிட எடைமானத்தின் அளவும் ஆற்றலளவும் பல கோடி மடங்காகப் பெருகுகின்றன. ஆகவே ஞாயிற்றுமண்டலத்திலிருந்து செல்லும் ஒளியாற்றலின் அளவை நோக்க, அது இழக்கும் பருமானம் மிகச் சிறிதேயாகும். தவிர, இயற்கையின் நேர்வரை கோளாகாரமான அண்டவரையாத லால், வெளிச்செல்லும் ஒளியாற்றல் சென்று மீண்டு வளைவதே யாகும்.