பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




172

அப்பாத்துரையம் - 7

ஐன்ஸ்டீன் எடுத்துக் காட்டியுள்ளார். அறிவியலின் பக்தராகவும், சமய ஆர்வலராகவும், கலையார்வலராகவும் ஒருங்கே விளங்கிய இப்பெரியாரையன்றி, வேறு எவரும் இம்மூன்றின் ஒருமைப் பாட்டை அனுபவித்துணர்ந் திருக்க முடியாது என்னலாம்.

முனிவரின் ஒதுங்கிய வாழ்வு, மனித இனப்பற்றாளரின் நட்பார்வம் ஆகிய இரண்டுக்கும் இடையே ஊசலாடியவர் ஐன்ஸ்டீன். அவர் தன்னலமற்ற எளிமை, இனிய உரையாடல் திறம், நகைத்திறம், பரந்த அறிவு ஆகியவை அவரை அவர் நண்பர்களின் நட்புத்தெய்வமாக்கியிருந்தன. அவர் இயல்பான ஆசிரியத்திறமையும் இதுபோல அவருடைய மாணவர் களிடையே அவர் அருமையை உயர்த்தின. ஆனால், நட்பின் திறமறிந்த அவர் நட்பை மிகுதி துய்க்கவில்லை. ஆசிரியத் திறமிக்க அவர் ஆசிரியத் தொழிலில் தம் முழுத்திறமையையும் பயன்படுத்தவில்லை. ஏனெனில், சமுதாயத்திலிருந்தே அவர் பெரும்பாலும் ஒதுங்கி வாழ்ந்தார். ஆராய்ச்சியை அவர் தம் ஒரே காதலாகக் கொண்டிருந்தார். அதற்காக அவர் குடும்பவாழ்வில் கூடப் பெரிதும் பற்றற்ற வராகவே நடந்துகொண்டார்.

அவர் வாழ்க்கையை நாம் அன்பும் அருளும் கருவகம் கொண்ட அகத்துறவு வாழ்க்கை என்னலாம்.

கீழ்வரும் இனிய நிகழ்ச்சி இதை நம்முன் கண் கூடாகக் கொண்டு வருகின்றது.

ஐன்ஸ்டீனின் கனிந்த அருளுள்ளம்.

பிரின்ஸ்டனில் ஐன்ஸ்டீன் ஆராய்ச்சியில் மூழ்கிக் கிடந்தார். ஆராய்ச்சியிலீடுபட்ட மாணவர்கள் கூட அவர் வேலையில் தலையிடத் துணியவில்லை;. அவரும் அதை விரும்பவில்லை;. அவர் புகழ் உலகெங்கும் பரந்திருந்தது. உலகின் பெரியார் அவரை அடிக்கடி நாடிவந்தனர். ஆனால், எவருக்கும் அவர் தொடர்பு அரிதாகவே இருந்தது. ஆனால், அரியார்க்கு அரியரான அவர், ஓர் ஏழைச் சிறுமிக்கு என்றும் எளியவராய் அமைந் தார்!

அவள் பத்துவயதுக் குழந்தை;. பள்ளியில் படித்து வந்தாள்;. கணக்கென்றால்; அவளுக்குக் கசப்பு;. அது அவள் மூளையில் ஏறவில்லை. அவளுக்கு அது ஓயாத் தொல்லை தந்தது.