பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. இளமைக்காலம்

என் தந்தை ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்; கோயில் காரியக்காரராயிருந்து அவர் காலங்கழித்து வந்தார். ஆனால், என் தாய் செல்வக்குடியில் பிறந்தவள். அவள் தந்தையாகிய என் பாட்டன் ரீடை அறியாதவர் எங்கள் வட்டாரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால், என் தாய் அவர் கருத்துக்கு எதிராகவே மணஞ்செய்து கொண்டாள். இதனால் அவள் என் பாட்டன் ஆதரவையும், அவர் செல்வத்தின் உதவியையும் இழந்து, என் தந்தையின் வறுமையிலேயே முழுதும் கிடந்து உழல வேண்டியதாயிற்று.

நான்

மணவாழ்வின் பொறுப்பை என் தந்தை ஓர் ஆண்டுக்கு மேல் கொண்டு செலுத்த முடியவில்லை. என்னை என் தாய்வயிற்றிலேயே விட்டு விட்டு அவர் காலமானார். ஆணாய்ப் பிறப்பேனா, பெண்ணாய்ப் பிறப்பேனாஎன்பதைக் கூட அவர் அறியவில்லை. என் முகம் காணவுமில்லை. அவர் இறந்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் என்னை என் தாய் பெற்றெடுத்து, ஒரு மாதம் கூட என்னைக் கண்டு மகிழாமல் என் தந்தையைத் தொடர்ந்து சென்றாள்.

என் மாமன் ரீடு இப்போது தாய் தந்தையரற்ற என்னைத் தன் வீட்டுக்குக் கொண்டு வந்தார். ஜான், எலியா, ஜார்ஜியானா ஆகிய அவர்கள் பிள்ளைகளுடன் அவர் என்னையும் வளர்க்க ஏற்பாடு செய்தார். ஆனால், அவரும் விரையில் காலமானதால் நான் என் அத்தையிடமே வேண்டா விருந்தாளியாக இருந்து வளர்ந்தேன்.

ஜான் எனக்கு நாலு ஆண்டு மூத்தவன். என் அத்தை அவனுக்குக் கொடுத்த இளக்காரத்தால் அவன் எப்போதும் நோயாளியாகவே நடித்து. மிகுதி உணவும் பண்டங்களும்