ஜேன் அயர்
[183
அவசரக்கோலமாக அணிவித்து, “அத்தை அழைக்கிறாள் போ என்றாள். என்ன காரியம் என்று புரியாமல் நான் சென்றேன்.
திருமதி ரீட் நாற்காலியில் அமர்ந்து, மிக நெட்டையாகத் தோன்றிய ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாள்.
66
'திரு பிராக்கிள் ஹர்ஸ்ட்! உங்கள் அன்புக்கு நன்றி, இதோ இந்தப் பெண்ணைப் பற்றித்தான் நான் பேசியது.”
'இது மிகச் சிறிய பெண்ணாயிற்றே! எத்தனை வயது
இருக்கும்?”
“பத்து வயதாயிற்று'
அவர்கள் ஏதோதோ பேசினர். நான் அதைக் கவனிக்க வில்லை. என்னை என்ன செய்யத் திட்டமிடுகிறார்களோ என்ற எண்ணத்தில் ஆழ்ந்திருந்தேன். ஆனால், அத்தை என்னைப் பற்றிப் பேசிய கடுமொழிகள் என்னைத் திடுமெனத் தட்டி எழுப்பின.
"நான் கூறியது நினைவிருக்கட்டும். இவள் மிகவும் குறும்புக்காரப் பெண். திருட்டும், வஞ்சகமும், பொய்யும் அவளுக்குரிய குணங்கள். பள்ளியில் சேர்த்துக் கொண்டால் மற்றப் பிள்ளைகளை இவள் கெடுத்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பும் உங்களைச் சாரும்" என்றாள் அத்தை.
ஜானை வெறுத்ததைவிடப் பத்துமடங்கு அவன் தாயை அந்த நொடியிலேயே என் உள்ளம் வெறுத்தது. என் உள்ளத் திலிருந்து தீயும் புகையும் அனற்பொறிகளும் எழுந்தன. என்னை முதன் முதலாக ஒருவரிடம் அறிமுகப்படுத்தும் போதே என்னைப் பற்றிய இந்த முடிவான தீர்ப்புக்கு அவரைக் கொண்டு வர நினைக்கிறாள். நான் எங்கும் உருப்பட்டு விடக்கூடாதே என்பதுதான் அவள் கவலை என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
அவள் கடைசிச் சொற்கள் ன்னும் என் மனித உணர்ச்சியைக் கெடுத்தன.
அவளுக்கு வீடும், குடியும் கிடையா. போக்குமில்லை, தகுதியுமில்லை. எந்த வகையிலும் யாருக்கும் பயன்படக்