பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




184

அப்பாத்துரையம் 7

கூடியவள் என்று நம்பவும் முடியவில்லை.ஓய்வு நாட்களில் கூட அவளுக்குச் செல்ல இடம் கிடையாது. இந்த நிலைமையில் அவளை ஏற்றுக் கொண்டு என் கையைக் கழுவி விடுவதானால் எனக்கு அனுப்பத் தடையில்லை. அனாதையான இந்தச் சுமையை நான் எத்தனை நாள் வைத்துக் கொண்டிருக்க முடியும்?”

"அந்தோ! அவள் என் அத்தை என்பதையோ, நான் அவள் உறவினள் என்பதையோ கூட அவள் மறைத்துப் பேசிவிட்டாள். நான் ஓர் அனாதை. தங்கவீடில்லை; அன்பு காட்ட உறவில்லை; இவ்வளவு ஒட்டறுத்துப் பேசுவது போதாதாம் என்னைப் பொய்க்காரி, வஞ்சகி என்றும் அறிமுகம் செய்து வைக்கிறாள்' இவற்றை எண்ணி எண்ணி என் நெஞ்சம் குமுறிற்று.

அவர் போனதும், என் ஆத்திரத்தையெல்லாம் அவளிடம் ஒரு தடவை கொட்டினேன்.

"திருமதி ரீட்! பொய் பேசுபவள் நான் இல்லை. என்னை பற்றி நீ கூறியவை யாவும் பொய். எனக்கு உறவே இல்லை என்று சொன்னாய். உன்னை என் அத்தை என்று தான் நினைத்திருந்தேன். யாராயிருந்தாலென்ன? இந்த உலகில் எனக்கு ஒருவர் பகைவர் உண்டானால், அது நீதான், நீதான் நீதான்!”

வெறுப்பும், வியப்பும், மலைப்பும் அவள் முகத்தில் வெடித்தன. ஆனால், வெளியே அனுப்பத் திட்டமிட்டபின் வேறு மிகுதியாக என்ன தண்டனை தரமுடியும்?

"ஜேன் அயர்! உன் துடுக்குத்தனத்துக்கு உனக்குத் தண்டனை கிடைக்காமல் போகாது. பார்க்கிறேன்”என்று அவள் கறுவினாள்.

அந்த வீட்டைவிட்டுப் போவதில் எனக்குச் சிறிதும் வருத்தம் இல்லை. ஆனால், அந்த வீட்டில் என் ஒரே தோழி, என் ஆசிரியர் பெஸ்ஸி இருப்பதை நினைத்தே எனக்குச் சற்று வருத்தம் ஏற்பட்டது.