2. பள்ளி வாழ்வு
என் ஒரே உறவினர் வீட்டிலிருந்து நான் என்றென் றைக்குமாக வெளியேறும்போது கூட, என்னை வழியனுப்ப யாரும் வரவில்லை. பெஸ்ஸி ஒருத்திதான் அஞ்சல் வண்டியை நிறுத்திவைத்து என் பெட்டியுடன் வந்து என்னை வழியனுப்பினாள். "சின்னஞ்சிறு பெண் பள்ளிக்குப் போகிறாள். பத்திரமாகப் பார்த்துக் கொள்" என்று வண்டியோட்டியிடம் கூறும் கரிசனையும் அவளிடம் தான்
இருந்தது.
என் பயணத்தைப் பற்றி எனக்கு ஒன்றுமே நினை வில்லை. எவ்வளவு நேரம் பயணம் செய்தேன் என்பதும் எனக்குத் தெரியாது. நான் பயணமுழுவதும் ஒரே உறக்கமாக உறங்கிவிட்டேன். திடீரென்று வண்டி நின்ற அதிர்ச்சியால் நான் விழித்தேன். வெளியிலிருந்து ஒரு நாகரிகமான குரல் "இந்த வண்டியில் ஜேன் அயர் என்ற ஒரு பெண் வருகிறாளா?" என்று கேட்டது. என் பெயர் கேட்டதும் நான் "ஆம்; இதோ இருக்கிறேன்", என்று எழுந்தேன். குரல் கொடுத்த மாது என்னைக் கைகொடுத்து இறக்கிவிட்டாள். வேறு ஒருவர் பெட்டியை வாங்கிக் கொண்டார்.
பொழுது விடியவில்லை. வண்டியிலிருந்து இறங்கியதும் குளிர்காற்று என்மீது வீசி என்னை நடுங்க வைத்தது. நாங்கள் அரையிருட்டிலேயே ஓர் அகன்ற கிளைப்பாதை வழியே சென்று, ஒரு பெரிய கட்டிடத்தில் நுழைந்தோம். பல அறை களைக் கடந்து சென்ற பின் கணப்படுப்பு செக்கச் செவேல் என்று எரிந்து கொண்டிருந்த ஓர் அறையில் நுழைந்தோம்.
என்னை இட்டுவந்த மாதை அப்போதுதான் நான் முதன் முதலாகத் தெளிவாகக் கண்டேன். அவர் வடிவம் நெட்டை