பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(186) ||

அப்பாத்துரையம் – 7

யாகவும், முகம் அழகும் அருளொளியும் உடையதாகவும் இருந்தது. அவர் நடையில்அமைதியும் பெருமிதமும் நிறைந் திருந்தன. என்னுடன் பெட்டியைக் கொண்டுவந்த பெண் அவரை விட வயதில் சிறியவர். அவர் பெயர் செல்வி மில்லர் என்று அவர்கள் உரையாடலால் நான் அறிந்தேன்.

"இது மிகச் சிறு பெண். தனியே எங்கும் செல்லத்தக்க வயதன்று; கவனமாய்ப் பார்த்துக் கொள், செல்வி மில்லர்!” என்று அவர்கூறி, என்னை அவருடன் அனுப்பினார். அனுப்பு கையில் அவர் என் தோள்மீது கையை வைத்து ஆதரவாக ‘பயணத்தால் நீ மிகவும் அலுப்படைந்திருப்பாய், அல்லவா?” என்று கேட்டார்.

“ஆம்; சிறிது களைப்பாகவே இருக்கிறது.” என்றேன்.

'அலுப்புமட்டுமென்ன? பசி கூடத்தான் இருக்கும். செல்வி மில்லர்! போய் விரைவில் உணவு கொடுத்துப் படுக்க வை”என்றார் அப்பெரிய மாது.

என்னைச் செல்வி மில்லர் இட்டுக் கொண்டு சென்ற அறை மிகவும் பெரியதாயிருந்தது. அதில் கிட்டத்தட்ட என் வயதுடைய பெண்களிலிருந்து எல்லா வயதுப் பெண் களும் நிறைந்திருந்தனர். பெரிய மேசைகளைச் சுற்றி அவர்கள் புத்தகமும் கையுமாக முனங்கிக் கொண்டிருந்தனர். செல்வி மில்லர் அவர்களிடம் என்னைப் புதிய பெண் என்று அறிமுகம் செய்துவைத்தபின், “இன்று, இப்போது சாப்பாடு கொண்டுவரச் சொல்லியிருக்கிறேன். படிப்பை நிறுத்தி விடலாம்” என்றார்.

சாப்பாட்டுக்கு மாக்காண்டுகளும் நீரும் தரப்பட்டன. அதுமுடிந்து சிறிதுநேர வழிபாட்டுக்குப் பின் செல்வி மில்லர் என்னைப் படுக்கையறைக்கு இட்டுச் சென்றார். ஆனால், வழிபாட்டிடம், படிப்பகம், வகுப்பு எல்லாமே அறைகளாயில்லை. கூடங்களாக இருந்தன. எல்லாம் பள்ளியின் எண்பது பிள்ளைகளுக்கும் பொதுவானதால் எண்பது பிள்ளைகள் இருந்து படிக்கவோ, படுக்கவோ தக்கவையா யிருந்தன. இத்தனைய பிள்ளைகளுக்கிடையே நான் படுத்துறங்க நேர்ந்தது முதலில் அன்றைக்குத் தான். தொடக்கத்தில் எனக்குச்