1. முன்னுரை
இன்பநிலை
மக்களாகப் பிறந்தவர் எல்லோரும் இன்பத்தையும் வெற்றியையுமே நாடுகின்றனர். ஆனால், இன்பத்தின் உயிர் நிலை துன்பத்திற்குள் மறைந்து கிடக்கிறது என்பதையும், வெற்றியின் திறவுகோல் தோல்விகள் என்ற பெட்டகங் களிலேயே புதையுண்டிருக்கிறது என்பதையும் அறிந்தவர் மிகச் சிலரேயாவர். இதனாலேயே திருவள்ளுவர் பெருமான், "இன்பத்தை விரும்பாமல் துன்பத்தையே இயல்பென்று மேற்கொள்பவன்
66
உண்மையில் துன்பத்தை அடைவ
தில்லை” என்ற பொருளுடன்,
"இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்"
என்று கூறியிருக்கிறார்.
பெரியவர் - சிறியர்
துன்பங்களை வரவேற்று அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டும் உடல்வலியும் மனவலியு ம் இளமையிலேயே பெரிதும் காணப்படும். இளமையில் துன்பங்களையும் தோல்விகளையும் கண்டு அஞ்சுபவரும், அந்த அச்சத்தினால் ஊக்கம் இழப்பவரும் வாழ்க்கையில் அருஞ் செயல்களைச் சாதியார். அவர் நாளடைவில் சிறுமைப்பட்டுத் தம் வாழ்வில் வெறுப்பு அடைவர். மேலும் அவர் தம் வாழ்க்கையின் போக்கு முழுவதும் தம் கையில் இல்லை என்றும், வினைப்பயன் அல்லது தலைவிதியின் படியே எல்லாம் நடக்கும் என்றும் எண்ணுவர். ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெற்றோர் அனை வரும் தம்விதி என்பது, தம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளும் தம்